முகப்பு /காஞ்சிபுரம் /

நாளை மறுநாள் கோட்டையை நோக்கி பேரணி.. தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர்கள் சங்கம் முடிவு..

நாளை மறுநாள் கோட்டையை நோக்கி பேரணி.. தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர்கள் சங்கம் முடிவு..

X
நாளை

நாளை மறுநாள் கோட்டையை நோக்கி பேரணி

TamilNadu Government Department Vehicle Drivers Union Protest : காஞ்சிபுரத்தில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

  • Last Updated :
  • Kanchipuram, India

காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

15 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள வாகனங்களுக்கு பதிலாக புதிய வாகனங்களை வழங்கிட வேண்டும், அனைத்து துறைகளிலும் உள்ள ஓட்டுநர் காலி பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்பிட வேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர்கள் தலைமை சங்கம் சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் 15 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள வாகனங்களுக்கு பதிலாக புதிய வாகனங்களை வழங்க‌ வேண்டும், அனைத்து துறைகளிலும் உள்ள ஓட்டுநர் காலி பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்பிட வேண்டும்,ஓட்டுநர்களுக்கு தரஊதிய முரண்பாட்டை களைந்து புதிய ஊதிய திருத்தம் அமல்படுத்திட வேண்டும், ஓட்டுநர்களுக்கு கல்வி தகுதியின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்கிட வேண்டும்.

தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இதையும் படிங்க : ராசிபுரத்தில் பயங்கர சூறாவளி காற்று.. 5000 வாழை மரங்கள் சாய்ந்து நாசம்..

புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்திட வேண்டும் என்ற 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காஞ்சிபுரம் மாவட்ட தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர்கள் சங்கத்தினர் 20க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    மேலும், மே 8-ம் தேதி முதல் வாகன ஓட்டுனர்கள் அனைவரும் கோரிக்கை அட்டையை அணிந்து பணி செய்து வருவதாகவும்,வரும் 22-ம் தேதி மாநில அளவில்கோட்டையை நோக்கி பேரணியாக செல்ல விருப்பதாகவும் தெரிவித்தனர்.

    First published:

    Tags: Kanchipuram, Local News