முகப்பு /காஞ்சிபுரம் /

காஞ்சி பட்டுக்கு தனி முத்திரை.. காஞ்சிபுரம் நெசவாளர்களின் பட்ஜெட் கோரிக்கைகள்..

காஞ்சி பட்டுக்கு தனி முத்திரை.. காஞ்சிபுரம் நெசவாளர்களின் பட்ஜெட் கோரிக்கைகள்..

X
காஞ்சி

காஞ்சி பட்டுக்கு தனி முத்திரை

Kanchipuram News | தமிழ்நாடு பட்ஜெட்டில் நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை காத்திட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காஞ்சிபுரம் பட்டுக்கென்று தனி முத்திரை வழங்க வேண்டும் என்று காஞ்சிபுரம் நெசவாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Kanchipuram, India

பட்டு நகரம் என்று அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில் தயாரிக்கப்படும் பட்டு சேலைகளை வாங்க வெளி மாவட்டம், வெளி மாநிலம் மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் காஞ்சிபுரத்திற்கு வருகின்றனர். அந்த அளவிற்கு காஞ்சிபுரம் பட்டு சேலை உலகப் புகழ்பெற்று திகழ்கிறது.

இந்நிலையில், உலகப் புகழ் வாய்ந்த பட்டு சேலையை தயாரிக்க தேவையான மூலப்பொருட்களின் விலை உயர்வு காரணமாக, நெசவாளர்களின் வாழ்வாதாரம் நலிவடைந்து வருகிறது. இதனால் பட்டுச்சேலையின் உற்பத்தி குறைவதோடு அதன் விலையும் பல மடங்கு உயர்ந்து காணப்படுகிறது‌. இதனால் காஞ்சிபுரத்திற்கு பட்டுச்சேலை வாங்க வருவோர், காஞ்சிபுரம் பட்டு சேலைக்கு பதிலாக விலை குறைவான சேலையை வாங்கி செல்கின்றனர். இதன் காரணமாக, காஞ்சிபுரம் பட்டு சேலையின் விற்பனை குறைவதோடு நெசவாளர்களின் வாழ்வாதாரமும் பாதிப்படைகிறது.

இதையும் படிங்க : திருநெல்வேலி வழியாக தாம்பரத்திற்கு சிறப்பு ரயில்.. தெற்கு ரயில்வே அறிவிப்பு..

எனவே, தமிழ்நாடு பட்ஜெட்டில் நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை காத்திட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. மேலும், காஞ்சிபுரம் பட்டுக்கென்று தனி முத்திரை வழங்குவதன் மூலம், போலி பட்டு சேலை விற்பனையை தடுத்து, அசல் காஞ்சிபுரம் பட்டு சேலையின் விற்பனையை அதிகரித்து நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி, பட்டு வியாபாரத்தை காத்திட வேண்டும் என விற்பனையாளர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

அத்துடன், கூட்டுறவு சங்கங்கள் அல்லாது தனியார் பட்டு சேலை உற்பத்தியாளர்கள் மற்றும் நெசவாளர்கள் தங்களுக்கும் அரசாங்கம் சார்பில் நலத்திட்டங்களை இந்த பட்ஜெட்டில் செய்து கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பை முன்வைத்துள்ளனர்.

First published:

Tags: Kanchipuram, Local News, TN Budget 2023