முகப்பு /காஞ்சிபுரம் /

காஞ்சிபுரம் சிங்கப்பெருமாள் கோவிலில் சிறப்பு திருமஞ்சனம்!

காஞ்சிபுரம் சிங்கப்பெருமாள் கோவிலில் சிறப்பு திருமஞ்சனம்!

X
சிறப்பு

சிறப்பு அலங்காரத்தில் சிங்கப்பெருமாள் 

Kanchipuram News : காஞ்சிபுரம் ஸ்ரீஅழகிய சிங்கப்பெருமாள் கோவிலில் தமிழ் புத்தாண்டை ஒட்டி சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.

  • Last Updated :
  • Kanchipuram, India

108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருவேளுக்கை என அழைக்கப்படும் பிரசித்திபெற்ற காஞ்சிபுரம் ஸ்ரீ அழகிய சிங்கப்பெருமாள் கோவிலில் தமிழ் வருட பிறப்பை ஒட்டி அழகிய சிங்கப்பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.

இந்த புத்தாண்டு சிறப்பு திருமஞ்சனத்தை ஒட்டி ஸ்ரீதேவி, பூதேவி, மற்றும் அமிர்தவல்லி தாயாருடன் எழுந்தருளிய ஸ்ரீ அழகிய சிங்கப்பெருமாளுக்கு பால், தயிர், தேன், இளநீர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்டவைகளால் சிறப்பு திருமஞ்சனம் செய்து துளசி மாலை அணிவித்து தூப தீப ஆராதனை செய்யப்பட்டது.

பின்னர் சிங்கப்பெருமாளுக்கு பச்சைப்பட்டு உடுத்தி, அமிர்தவல்லி தாயாருக்கு சிகப்பு பட்டு உடுத்தி மல்லிகைப்பூ, பன்னீர் பூ மலர் மாலைகள் அணிவித்து பக்தர்கள் முன்னிலையில் சிறப்பு மகா தீபாராதனை நடைபெற்றது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

புத்தாண்டை ஒட்டி நடைபெற்ற சிறப்பு திருமஞ்சனத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ அழகிய சிங்கப்பெருமாளை தரிசனம் செய்து வணங்கி வழிபட்டு சென்றனர்.

top videos
    First published:

    Tags: Kanchipuram, Local News