கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டத்தை சேர்ந்தவர் இமாம். சிறுவயதில் இருந்தே தனது தந்தை பாரம்பரியமாக செய்து வந்த பித்தளை, அலுமினியம் மற்றும் செம்பு உள்ளிட்டவைகளை உருக்கி சிலை வடிக்கும் தொழிலை பார்த்து அதன் மீது ஆர்வம் கொண்ட இவர் தனது 9 வயதிலிருந்து சிலையை வடிக்க துவங்கியுள்ளார். 49 வருடங்களாக இத்தொழிலை மேற்கொண்டு வரும் இவர் பல்வேறு வகையான சிலைகளை வடிவமைத்து வருகிறார். தற்போது இவர் தன்னுடைய மகன் ஆசிப் உதவியுடன் பழைய பித்தளை பொருட்களை உருக்கி சாமி சிலை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.
மகாராஷ்டிராவில் தொடங்கிய இவர்களது கலைப்பயணம் தமிழகம் மட்டும் அல்லாது ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களுக்கு குடும்பத்தினருடன் சென்று அங்கு தங்கியிருந்து பித்தளை, அலுமினியம், செம்பு உள்ளிட்டவைகளை உருக்கி இந்து, முஸ்லிம், கிறிஸ்துவம் உள்ளிட்ட அனைத்து மதகடவுள் சிலைகளையும் தத்ரூபமாக செய்து தருகிறார்.
காஞ்சியில் முகாம் :
இந்நிலையில், இவர் தற்போது காஞ்சிபுரம் ரங்கசாமி குளம் அருகே உள்ள விஜயகிராமணி தெருவில் முகாமிட்டுள்ளார். தொடர்ந்து பொதுமக்களிடமிருந்து பெற்ற பித்தளை அலுமினியம் மற்றும் செம்பு பாத்திரங்களை உருக்கி அவற்றின் எடைக்கு ஏற்ப உருக்கப்பட்ட உலோகங்களை அச்சில் ஊற்றுகிறார். பின்னர் அதிலிருந்து அழகான கடவுள் சிலைகளை உடனுக்குடன் மிகவும் நுட்பமாக செய்து தருகிறார்.
விதவிதமான கடவுள் சிலைகள் :
அதில், விநாயகர், லஷ்மி, சரஸ்வதி, நடராஜர், முருகர், சாய்பாபா, அலமேலு மங்கை தாயார், பெருமாள், கிருஷ்ணர் என பல்வேறு சுவாமி சிலை மற்றும் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை சிலையையும் அரை மணி நேரத்தில் தயார் செய்து வழங்கி வருகின்றனர். பித்தளையை உருக்கி சிலை வார்ப்பு செய்ய எடைக்கு ஏற்ப குறைந்தபட்சம் 300 ரூபாய் முதல் கூலியாக பெறுகின்றனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இதனை அறிந்த காஞ்சிபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி மக்கள் தங்களது வீட்டில் உள்ள பழைய பித்தளை பாத்திரங்களை கொண்டு வந்து உருக்கி, அதை தங்களுக்கு பிடித்த சுவாமி சிலைகளாக உருவாக்கித் தர சொல்லி எடுத்து செல்கின்றனர். வாடிக்கையாளரிடம் இருந்து வாங்கப்படும் பித்தளை சாமான்களை வாடிக்கையாளர்கள் கண் முன்னே உருக்குவதாலேயே தங்களுடைய பழைய பித்தளை சாமான்களை நம்பிக்கையுடன் கொடுத்து உருக்கி பிடித்தமான சாமி சிலைகளை செய்து தர சொல்லி பெற்று செல்கின்றனர். சிலை வடிக்கும் கலைஞரான இமாமை 9894335941 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kanchipuram, Local News