முகப்பு /காஞ்சிபுரம் /

காஞ்சிபுரத்தில் ‘ஸ்ருதி 90.8’ செயலி தொடக்கம்.. எதற்கு இந்த செயலி?

காஞ்சிபுரத்தில் ‘ஸ்ருதி 90.8’ செயலி தொடக்கம்.. எதற்கு இந்த செயலி?

X
ஸ்ருதி

ஸ்ருதி 90.8 செயலி தொடக்கம்

Kanchipuram District | காஞ்சிபுரம் சங்கரா கல்லூரியின் சமுதாய சேவை அமைப்புகளில் ஒன்றான ஸ்ருதி 90.8  என்ற செயலி மற்றும் இணையதளம் தொடக்க விழா ஆகியவை நடைபெற்றன.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Kanchipuram, India

காஞ்சிபுரம் சங்கரா கல்லூரியின் சமுதாய சேவை அமைப்புகளில் ஒன்றான 'ஸ்ருதி 90.8' என்ற செயலி மற்றும் இணையதளம் தொடக்க விழா நடைபெற்றன.

காஞ்சிபுரம் சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் சமுதாய சேவை அமைப்பான ஸ்ருதி 90.8 என்ற வானொலி நிலையம் செயல்பட்டு வருகிறது. இதன் செயலி மற்றும் இணையதளம் தொடக்க விழா கல்லூரியில் உள்ள காஞ்சி மகா சுவாமிகள் கலையரங்கத்தில் நடைபெற்றது.

இந்த விழாவுக்கு கல்லூரி முதல்வர் கே.ஆர்.வெங்கடேசன் தலைமை வகித்து வானொலி மூலம் மக்களுக்கு செய்து வரும் சேவைகளை விளக்கி பேசினார். வானொலி நிலைய மேலாளர் ஆர்.கே.பாலச் சந்தர் முன்னிலை வகித்தார்.

சமுதாய வானொலிக்கான இணையதளத்தை சென்னை எம்.ஓ.பி.வைஷ்ணவா பெண்கள் கல்லூரியின் முதல்வர் லலிதா பாலகிருஷ்ணன் தொடக்கி வைத்தார்.

வானொலி நிலையத்திற்கு சிறப்பான பங்களித்த விவசாயிகள், நெசவாளர்கள், சமூக ஆர்வலர்கள், இசைக்கலைஞர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் ஆகியோருக்கு காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமி யுவராஜ் விருதுகளையும், சான்றிதழகளையும் வழங்கினார். நிறைவாக தமிழ்ப் பேராசிரியர் தெய்வசிகாமணி நன்றி கூறினார்.

First published:

Tags: Kanchipuram, Local News