முகப்பு /செய்தி /காஞ்சிபுரம் / திருமணத்தில் நடனமாடிக் கொண்டிருந்த இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

திருமணத்தில் நடனமாடிக் கொண்டிருந்த இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

உயிரிழந்த நபர்

உயிரிழந்த நபர்

Sriperumbudur death | பெண் தோழி அக்காவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் உற்சாகமாக நடனமாடி கொண்டிருந்த இளைஞர் திடீரென சரிந்து விழுந்து உயிரிழந்தார்.

  • Last Updated :
  • Sriperumbudur, India

சென்னை அருகே திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடனமாடிக்கொண்டிருந்த கல்லூரி மாணவர் காதில் ரத்தம் வந்து திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவை சேர்ந்த சத்தியசாய் ரெட்டி(21) என்பவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பொறியியல் கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு தன்னுடன் படிக்கும் பெண் தோழியின் அக்காவிற்கு கோயம்பேடு 100 அடி சாலையில் உள்ள வராகம் திருமண மண்டபத்தில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.

வரவேற்பு நிகழ்ச்சியில் நடனமாடிக் கொண்டிருந்த சத்தியசாய் ரெட்டி திடீரென மயங்கி விழுந்துள்ளார். பின் இவருக்கு வலிப்பு ஏற்பட்டு காதில் ரத்தம் வந்துள்ளது. உடனடியாக தனியார் மருத்துவமனை அழைத்துச் சென்று பரிசோதனை செய்தபோது வரும் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து கோயம்பேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

top videos
    First published:

    Tags: Death, Kanchipuram, Sriperumbudur Constituency