முகப்பு /காஞ்சிபுரம் /

"மனோபாலா மறைவு திரையுலகத்திற்கு ஈடுசெய்யமுடியாத இழப்பு..." - செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ இரங்கல்!

"மனோபாலா மறைவு திரையுலகத்திற்கு ஈடுசெய்யமுடியாத இழப்பு..." - செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ இரங்கல்!

மனோபாலா செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ

மனோபாலா செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ

நகைச்சுவை நடிகர் மனோபாலா மறைவிற்கு ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் கு.செல்வப்பெருந்தகை இரங்கல் தெரிவித்துள்ளார்.

  • Last Updated :
  • Kancheepuram (Kanchipuram), India

நடிகர் மனோபாலா மறைவிற்கு ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் கு.செல்வப்பெருந்தகை இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

தமிழ் திரைப்பட இயக்குனரும், தயாரிப்பாளரும், சிறந்த நடிகருமான மனோபாலா உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். மனோபாலா 35க்கும் மேற்பட்ட திரைப்படங்களையும், 16 தொலைக்காட்சித் தொடர்களையும் 3 தொலைக்காட்சித் திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். மேலும் 175 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பல வேடங்களில் நடித்துள்ளார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக்செய்க

தமிழ் திரையுலகில் பன்முகத் திறமையால் வளர்ச்சியடைந்தவர். காமெடி நடிப்பில் வெகு இயல்பாக நடிக்கக் கூடியவர். இவர் நடித்த காமெடிக் காட்சிகள் மிகவும் ரசிக்கத்தக்கவை. இவருடைய இழப்பு தமிழ் திரையுலகத்திற்கு ஈடு செய்யமுடியாத இழப்பு.

top videos

    அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்தனை செய்கிறேன் என அதில்  தெரிவித்துள்ளார்.

    First published:

    Tags: Kancheepuram, Local News