முகப்பு /காஞ்சிபுரம் /

ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவ பெருமாள் கோயில் தேரோட்டம் - தேரை வடம் பிடித்த இழுத்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்..!

ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவ பெருமாள் கோயில் தேரோட்டம் - தேரை வடம் பிடித்த இழுத்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்..!

X
ஆதிகேசவ

ஆதிகேசவ பெருமாள் கோயில் தேரோட்டம்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாளின் சித்திரை மாத பிரம்மோற்சவ விழா மே 4 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

  • Last Updated :
  • Kancheepuram (Kanchipuram), India

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் திருக்கோவில் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக கருதப்படும், பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் திருக்கோயில் உள்ளது. இந்த கோவிலுக்கு பூதபுரி ஷேத்ரம் என்ற பெயரும் உண்டு.

இந்த தலத்தில் அவதரித்த வைணவ மகான் ஶ்ரீ ராமானுஜரின் 1006 ஆம் ஆண்டு அவதார விழா கடந்த ஏப்ரல் 16 ஆம் தேதி துவங்கி 26ஆம் தேதி முடிந்தது. இதைத் தொடர்ந்து ஸ்ரீ ஆதிகேசவ பெருமாளின் சித்திரை மாத பிரம்மோற்சவ விழா மே 4 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி, மோகினி அவதாரம், தங்க பல்லக்கு, யாளி வாகனம், புஷ்ப பல்லக்குகளில் ஆதிகேசவ பெருமாள் எழுந்தருலிளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

அதனை தொடர்ந்து ஆதிகேசவ பெருமாள் திருத்தேர் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். வழி நெடுகிலும் நீர் மோர் குளிர்பானங்கள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் திருக்கோவில் தேரோட்டம் 

இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்தனர். இந்த திருவிழாவை ஒட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 100க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக்செய்க

திருத்தேரானது தேரடி வீதியில் துவங்கி காந்தி சாலை, திருவள்ளூர் சாலை சின்னக்கடை வீதி வழியாக சென்று நிலையை அடைந்தது‌.

top videos

    வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் ‘கோவிந்தா கோவிந்தா’ என்ற கோஷத்துடன் வலம் வந்து சாமி தரிசனம் செய்தனர். இந்த விழாவில் அரிதாரம் பூசிய கலைஞர்கள் பொய்கால் குதிரையாட்டம் ஆடியது, காண்போரின் கண்களுக்கு விருந்தாக அமைந்தது.

    First published:

    Tags: Kancheepuram, Local News