உலகில் உள்ள ஜீவராசிகளின் பாவ புண்ணிய கணக்குகளை எழுதுபவராக கருதப்படுபவர் சித்ரகுப்த சுவாமி. இந்தியாவில் காஞ்சிபுரத்தை தவிர, வேறு எங்கும் சித்ரகுப்த சுவாமிக்கு தனி கோவில் இல்லை என்று சொல்லப்படுகிறது.
இந்நிலையில் புண்ணிய நகரமாக விளங்கும், கோவில் நகரமான காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள நெல்லுக்கார தெருவில் கர்ணகி அம்பாள் சமேத ஸ்ரீ சித்ரகுப்தர் சுவாமி எனும் பெயரில் தனி கோவில் கொண்டு பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.
கேது தோஷம், கலத்தர தோஷம், வித்யா தோஷம், புத்திர தோஷம், நிவர்த்தியாகும் திருத்தலமாக விளங்குவதாக நம்பப்டும், இக்கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று அஷ்டபந்தன கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடந்தேறியது. இந்நிலையில், காஞ்சிபுரத்தில் தனி கோவில் கொண்டு விளங்கும் சித்ரகுப்த சுவாமிக்கு சித்ரா பௌர்ணமி அன்று ஆண்டுதோறும் சிறப்பு வழிபாடு நடத்தி திருமண வைபவம் நடைபெறுவது வழக்கம்.
இதையும் படிங்க : இந்த ஆண்டு கோத்தகிரி காய்கறி கண்காட்சியில் என்ன ஸ்பெஷல் தெரியுமா?
அந்த வகையில் சித்ரா பௌர்ணமியில்,கர்ணகி அம்பாள் சமேத ஸ்ரீ சித்ரகுப்த சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு வெள்ளி காப்பு சாத்தி, மலர் மாலைகள் அணிவித்து சிறப்பு அலங்காரத்தில் சிறப்பு வழிபாடு செய்து பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.
இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகள் மட்டுமில்லாமல் வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து வந்துள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சித்ரகுப்த சுவாமியை தரிசனம் செய்து தங்கள் வாழ்வின் பாவ புண்ணியங்களை பார்த்து எழுத வேண்டி எள் விளக்கு ஏற்றி சிறப்பு வழிபாடு நடத்தினர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்ததால்,கோவில் முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து பக்தர்களுக்கு எவ்வித இடர்பாடுகளும் இன்றி தரிசனம் செய்ய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானங்களும் வழங்கப்பட்டது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kanchipuram, Local News