காஞ்சிபுரம் - உத்திரமேரூர் மாநில நெடுஞ்சாலையில் விபத்துகளை குறைக்கும் வகையில் அதிக வேகமாக வாகனத்தை ஓட்டி வரும் வாகன ஓட்டிகளின் வேகத்தை கணக்கிடும் கருவி அமைப்பட்டுள்ளது. வாகன விபத்துகளை குறைக்கும் வகையில் வாகனத்தின் வேகம், நாள், நேரம், வாகனத்தின் திசை உள்ளிட்டவை பதிவாவதால் காவல்துறைக்கு பெரிதும் உதவுகிறது. இந்தியாவில் சாலை விபத்துகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், உலகளவில் சாலை விபத்தில் உயிரிழப்போர் எண்ணிக்கையில் முதலிடத்திலும், காயமடைவோரில் 3ம் இடத்தில் இந்தியா உள்ளதாக ஆய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
மேலும் இந்தியாவில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 53 சாலை விபத்துகள் நடப்பதோடு 4 நிமிடத்திற்கு ஒருவர் விபத்தில் உயிரிழக்கிறார். பழுதான சாலைகள், கைப்பேசியில் பேசிக்கொண்டே வாகனத்தை ஓட்டுவது, கண்கள் கூசும் முகப்பு விளக்குகள், வேகத்தடைகள் இருப்பது பற்றி அறியாமை, வாகனங்களில் அதிக அளவு பாரம் ஏற்றி செல்வது, மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டுவது உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் இதற்கு காரணமாக கூறப்படுகிறது. ஆனால் அதிவேகமாக வாகனங்களை இயக்குவதும் சாலை விபத்துகளுக்கு முதன்மை காரணங்களாக உள்ளன.
இந்நிலையில், ஒரு மில்லியன் மக்கள் தொகைக்கு அதிகம் உள்ள நகரங்களில் தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலையின் போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதிகள் மற்றும் முக்கிய சந்திப்புகளில் வேகத்தை கண்காணிக்கும் கேமரா, சிசிடிவி கேமரா, வேகத்தை அளவிடும் சாதனம், அறிவிப்பு பலகை, கேமரா, நம்பர் பிளேட்டை அடையாளம் காணும் தானியங்கி கருவி, எடைபார்க்கும் கருவி போன்ற மின்னணு அமலாக்க கருவிகள் பொருத்துவதை மாநில அரசுகள் உறுதி செய்து கருவிகள் இல்லாத இடங்களில் போக்குவரத்து இடையூறு ஏற்படாத வகையில் இந்த மின்னணு கண்காணிப்பு கருவிகளை பொருத்த வேண்டும் என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் என வழிகாட்டியது.
அந்த வகையில் காஞ்சிபுரம் அருகே காஞ்சிபுரம் - உத்திரமேரூர் மாநில நெடுஞ்சாலையில் மேல்பெரமநல்லூர் பகுதியில் சாலையின் இருபுறமும் வாகன வேகம் கண்காணிக்கும் கருவி அமைக்கப்பட்டுள்ளது. சூரிய சக்தி மூலம் இயங்கும் வகையில் அமைக்கபட்டுள்ள இந்த வேகம் கண்காணிக்கும் கருவி, துல்லியமான பதிவுகள் செய்யும் வகையில் அதிநவீன தொழில்நுட்பங்கள் கொண்ட கேமரா பொருத்தப்பட்டு இந்த கண்காணிப்பு கேமரா மூலம் சாலையில் செல்லும் வாகனங்களில் நேரம் மற்றும் தேதி, வாகனத்தின் சரியான வேகம், வாகனம் செல்லும் திசை குறித்த துல்லிய விவரங்களை தெரிந்துகொள்ள முடியும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
மேலும் போக்குவரத்து விதிமுறைகளை மீறி அதிவேகமாக செல்லும் வாகனங்கள் குறித்த தகவல்கள் அதில் பொருத்தப்பட்டுள்ள மின்னணு கருவி மூலம் அருகில் உள்ள காவல் கட்டுப்பாட்டு மையத்திற்கு மின்னணு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். மேலும் அதில் இச்சாலை வழியாக செல்லும் வாகனத்தின் இரு புகைப்படங்களை சேமித்து வாகனத்தின் முழு புகைப்படம் மற்றும் வாகன பதிவு குறித்த புகைப்படம் இடம்பெறும். மிதமான வேகம் ஆபத்தை விளைவிக்காது என்பதை கருத்தில் கொண்டு, சரியான வேகக்கட்டுப்பாடு ,சாலை விதிகளை கடைபிடித்து சென்றால் விபத்துக்களை தவிர்க்கலாம் என்பது இதன் நோக்கமாக உள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kanchipuram, Local News