காஞ்சிபுரம் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது என மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், ‘தமிழக அரசின் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் பத்தாம் வகுப்பு தோல்வி அடைந்தவர்களுக்கு ரூ.200/-, 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300/-(மாற்றுத்திறனாளிகள் பொருத்தவரை 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை ரூ.600/-), 12-ம் வகுப்பு தேர்ச்சி/பட்டயப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.400/-(மாற்றுத்திறனாளிகள் பொருத்தவரை ரூ.750/-)மற்றும் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.600/- (மாற்றுத்திறனாளிகள் பொருத்தவரை ரூ,1000/-)வீதம் மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில்,காஞ்சிபுரம் மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற
1) காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் மேற்காணும் கல்வித் தகுதிகளை பதிவு செய்து குறைந்தது ஐந்து ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும்(மாற்றுத்திறனாளிகளை பொருத்த வரை ஓராண்டு நிறைவு பெற்றிருந்தாலே போதும்)
2) பதிவினை தொடர்ந்து புதுப்பித்திருக்க வேண்டும்.
3) MBC/BCM/OBC/OC பிரிவினர் 40 வயதிற்குட்பட்டவராகவும், SC/SCA/ST பிரிவினர் 45 வயதிற்குட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.(மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பு இல்லை)
4) விண்ணப்பதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000/-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். (மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான வரம்பு இல்லை)
5) ஏற்கனவே வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித்தொகை பெற்றிருக்கக்கூடாது.
6) தினசரி மாணவராக கல்வி பயின்று வருவோருக்கு (Regular Student) உதவித்தொகை பெற தகுதியில்லை.
மேற்காணும் அனைத்து தகுதிகளும், விருப்பமும் உள்ள பதிவுதாரர்கள் காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் இலவசமாக வழங்கப்படும் விண்ணப்பத்தினை வேலைவாய்ப்பு அடையாள அட்டையுடன் நேரில் வருகை புரிந்து பெற்றுக்கொள்ளலாம் அல்லது www.tnvelaivaaippu.gov.in//empower என்ற இணையதள முகவரியிலும் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம் என்றும்,
பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் அதில் குறிப்பிட்டுள்ளவாறு வருவாய் ஆய்வாளர் அளவில் வழங்கப்பட்ட வருமானச் சான்று, மாற்றுச்சான்றிதழ், கல்விச்சான்று நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் சேமிப்பு கணக்கு புத்தக நகல் இணைத்து காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும்,
மேலும் உதவித்தொகை பெறுவதால் வேலைவாய்ப்பு அலுவலகம் (அலுவலக தொலைபேசி எண்: 044-27237124) மூலமாக பெறப்படும் பரிந்துரைகள் ஏதும் பாதிக்கப்படமாட்டாது என்றும்,
திருச்செங்கோட்டில் ஒரே நாளில் வெறி நாய் கடித்து 20 பேர் மருத்துவமனையில் அனுமதி!
செய்தியாளர்: கார்த்திக், காஞ்சிபுரம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kanchipuram, Local News