ஹோம் /காஞ்சிபுரம் /

டிரைவர்களுக்கு இலவசமாக டீ வாங்கி கொடுத்த காஞ்சிபுரம் ஆர்.டி.ஓ.. ஏன் தெரியுமா?

டிரைவர்களுக்கு இலவசமாக டீ வாங்கி கொடுத்த காஞ்சிபுரம் ஆர்.டி.ஓ.. ஏன் தெரியுமா?

X
காஞ்சி

காஞ்சி

Kanchipuram RTO | ஓட்டுநர்களுக்கு இலவசமாக தேநீர் கொடுத்த காஞ்சிபுரம் ஆர்.டி.ஒ

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kanchipuram, India

காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற வாகனங்களை நிறுத்தி ஓட்டுநர்களுக்கு தேநீர் மற்றும் சாலை விதிகள் குறித்த கையேடும் காஞ்சிபுரம் ஆர்.டி.ஓ.  வழங்கினார். தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் வாகன போக்குவரத்தின் காரணமாக நாள்தோறும் அதிக எண்ணிக்கையில் சாலை விபத்துக்கள் நடைபெற்று வருகிறது. சாலை விதிமுறைகள் முறையாக பின்பற்றாத காரணத்தினால் விபத்துகள் நடைபெறுவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

அதிகரித்து வரும் சாலை விபத்துகளை குறைக்கும் வகையில் வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு ஜனவரி 11ம் தேதி முதல் 17ம் தேதி வரை தமிழகம் முழுவதும் சாலை பாதுகாப்பு வாரம் கடைபிடிக்கப்படுகிறது. சாலை பாதுகாப்பு வாரத்தின் முக்கியத்துவத்தை பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் பல்வேறு நிகழ்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் சாலை பாதுகாப்பு தூய்மை வார விழா கொண்டாடப்பட்டது.

விழாவை ஒட்டி சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர்செல்வம் தலைமையில் சாலையில் சென்ற வாகன ஓட்டிகளை நிறுத்தி தேநீர் வழங்கி சாலை விதிமுறைகள் குறித்த கையேடுகளை கொடுத்து விதிமுறைகளை பின்பற்றி பாதுகாப்புடன் வாகனங்களை இயக்க ஓட்டுனர்களிடம் அறிவுரை வழங்கப்பட்டது. விழாவில் ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் பயிற்றுநர்கள் வட்டாரப் போக்குவரத்து அலுவலக ஊழியர்கள் என திரளானோர் கலந்துகொண்டனர்.

First published:

Tags: Kanchipuram, Local News