முகப்பு /காஞ்சிபுரம் /

30 வயதுக்கு மேற்பட்ட பெண்களா நீங்கள்? இதோ உங்களுக்கான ஹெல்த் டிப்ஸ்!

30 வயதுக்கு மேற்பட்ட பெண்களா நீங்கள்? இதோ உங்களுக்கான ஹெல்த் டிப்ஸ்!

X
இந்திய

இந்திய மருத்துவக் கழகத்தின் காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் டாக்டர் எஸ்.மனோகரன்

Kanchipuram news | காஞ்சிபுரம் பேரறிஞர் அண்ணா புற்றுநோய் மருத்துவமனையில் 30 வயதிற்கு மேற்பட்ட பெண்களை அதிகம் பாதிக்கும் கர்ப்பப்பை மற்றும் மார்பகப் புற்றுநோய் கண்டறிய சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

  • Last Updated :
  • Kanchipuram, India

காஞ்சிபுரம் பேரறிஞர் அண்ணா புற்றுநோய் மருத்துவமனையில் 30 வயதிற்கு மேற்பட்ட பெண்களை அதிகம் பாதிக்கும் கர்ப்பப்பை மற்றும் மார்பகப் புற்றுநோய் கண்டறிய சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

உலகம் முழுவதும் 30 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் அதிக அளவில் கர்ப்பப்பை புற்றுநோய் மற்றும் மார்பக புற்று நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் புற்றுநோய் முழுமையாக பரவிய பிறகு தான் சிகிச்சைக்கு வருகின்றனர் எனவே அவர்களை நோயிலிருந்து காப்பாற்றுவது அரிதாகிவிட்டது. ஆகையால் இந்த வகை புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிந்து கட்டுப்படுத்த அரசும், தொண்டு நிறுவனங்களும் தனியார் நிறுவனங்களும் ஆர்வம் காட்டி வருகிறது.

அந்த வகையில் காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா புற்றுநோய் மருத்துவமனையில் பல்வேறு தனியார் அமைப்புகள் இணைந்து மகளிர் நலம் என்ற பெயரில் சிறப்பு முகாம் நடத்தினர். இதில் 30 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு உடல் பருமன் ரத்த அழுத்தம் ரத்தசோகை, நீரிழிவு,, கர்ப்பப்பை மற்றும் மார்பக புற்றுநோயை ஆகியவற்றை கண்டறிய இலவச பரிசோதனை முகாம் நடைபெற்றது.

இந்த முகாமில் அரசு புற்றுநோய் மருத்துவமனையின் முன்னாள் நிலைய மருத்துவ அலுவலரும், இந்திய மருத்துவக் கழகத்தின் காஞ்சிபுரம் மாவட்ட தலைவருமான எஸ்.மனோகரன் பங்கேற்று முன்னிலை வகித்தார். பெண்களை அதிகம் தாக்கும் கர்ப்பப்பை மற்றும் மார்பக புற்றுநோய் கண்டறிதல் குறித்து அவர் கூறுகையில்,”30 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு உடல் பருமன்,இரத்த அழுத்தம்,இரத்த சோகை,நீரழிவு நோய் போன்ற நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. மேலும் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகளும் உள்ளது. எனவே அவற்றின் அறிகுறிகள் தெரிந்தால் உடனடியாக பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில்,”ரத்த சோகை வரும் பொழுது அவர்களுக்கு சுறுசுறுப்பின்மை,சோம்பலாக இருப்பது, மிகவும் அயர்ச்சியாக உள்ளது போன்ற அறிகுறிகள் இருக்கும் என்றும் அவர்கள் தங்கள் ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை தெரிந்து கொண்டு குறைவாக இருந்தால் அதற்கேற்ப முருங்கைக்கீரை மற்றும் வெள்ளம், பேரிச்சம்பழம் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொண்டால் ரத்த சோகை நோயில் இருந்து அவர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ளலாம் என்றும் மிகவும் ஹீமோகுளோபின் குறைவாக உள்ளவர்கள் மருத்துவ ஆலோசனை மேற்கொண்டு முறையான இரும்பு சத்து மாத்திரைகளை உட்கொண்டு அவர்கள் தங்களை ரத்த சோக நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம் என்று தெரிவித்தார்.

மேலும் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் முறையாக பரிசோதனை மேற்கொண்டு ரத்த அழுத்தத்தில் மாறுதல் இருப்பின் அவர்கள் தங்களது யூரியா மற்றும் கிரியாட்டின் அளவை பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் மேலும் சிறுநீரக செயல்பாட்டை பரிசோதனை மேற்கொண்டு அதற்கு ஏற்றார் போல் சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.

அடுத்தபடியாக மாறுபட்ட உணவு பழக்கங்கள் மற்றும் உட்கார்ந்து கொண்டே வேலை செய்வது மற்றும் உடற்பயிற்சியின்மை காரணமாக உடல் பருமன் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. மேலும் அவற்றின் காரணமாக மாரடைப்பு வர வாய்ப்புள்ளது எனவே அவர்கள் தங்களது உடல் பருமனை பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை இசிஜி எடுத்து பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார். இதன் மூலம் முதற்கட்டமாக இருதய நோய் வரும் வாய்ப்புகளை தவிர்க்கலாம் என்று தெரிவித்தார்.

top videos

    இறுதியாக பெண்களுக்கு புற்றுநோயானது மார்பகம் மற்றும் கர்ப்பப்பையில் அதிகமாக வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. எனவே அவர்கள் தங்கள் மார்பகங்களில் ஏதேனும் கட்டி அல்லது வலி அல்லது ஏதேனும் மாறுதல் ஆகிய அறிகுறிகள் இருந்தால் உடனடியாக பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் ஒவ்வொரு மாதமும் மாதவிடாய்க்கு பின்னர் மார்பகங்களை பெண்கள் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் ஏதேனும் மாற்றங்கள் அல்லது சந்தேகம் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையை அணுகி முறையான பரிசோதனை மேற்கொண்டு முதல் கட்டத்திலேயே புற்றுநோயை தடுக்க முடியும்” என தெரிவித்தார்.

    First published:

    Tags: Health tips, Kanchipuram, Local News