முகப்பு /காஞ்சிபுரம் /

அரசு பள்ளியில் மாணவர்களுக்கு தலை வாழை இலை விருந்து வழங்கிய ஆசிரியர்கள்.. காஞ்சியில் ருசிகரம்!

அரசு பள்ளியில் மாணவர்களுக்கு தலை வாழை இலை விருந்து வழங்கிய ஆசிரியர்கள்.. காஞ்சியில் ருசிகரம்!

மாணவர்களுக்கு விருந்து வழங்கிய ஆசிரியர்கள்

மாணவர்களுக்கு விருந்து வழங்கிய ஆசிரியர்கள்

Kanchipuram | காஞ்சிபுரம் அருகே அங்கம்பாக்கம் அரசு நடுநிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு பள்ளி ஆசிரியர்கள் ஒன்றிணைந்து தலை வாழை இலை விருந்து வழங்கினர்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Kanchipuram, India

காஞ்சிபுரம் அருகே உள்ளஅங்கம்பாக்கம் அரசு நடுநிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு பள்ளி ஆசிரியர்கள் ஒன்றிணைந்து தலை வாழை இலை விருந்து வழங்கி மகிழ்வித்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் ஒன்றியத்தில் உள்ள அங்கம்பாக்கம் அரசு நடுநிலைப் பள்ளியில்125 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில்ஆசிரியர்கள் ஒன்றிணைந்து, ஆண்டுதோறும் மாணவர்களுக்கு இவ்வாறு தலை வாழை இலை விருந்து வழங்கப்படுவது வழக்கம்.

அதன்படி, மாணவர்களுக்கும், கிராமத்தின் தூய்மைக் காவலர்களுக்கும் தலை வாழை இலை விருந்து கொடுத்து சிறப்பிக்கப்பட்டனர். அத்துடன், மாணவர்கள் அனைவருக்கும் வடை, பாயாசம், இனிப்பு மற்றும் ஐஸ் கிரீம் ஆகியவற்றுடன் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.

பள்ளியின் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து இந்த ருசிகர செயலை செய்ததற்கு மாணவர்களும், பெற்றோரும் கிராம மக்களும் அவர்களை பாராட்டி மகிழ்ந்தனர். இந்த விருந்து நிகழ்வில் ஊராட்சி மன்ற தலைவர் ஏழுமலை, தலைமையாசிரியர் தணிகை அரசு ஆகியோர் பங்கேற்றனர்.

மேலும்,பட்டதாரி ஆசிரியர்கள் குளோரி, லதா, சேகர், ஆசிரியர்கள் சீனிவாசன், கலைவாணன், பொற்கொடி மற்றும் வார்டு உறுப்பினர் பாவலன், பள்ளி மேலாண்மைக்குழு கல்வியாளர் செங்குட்டுவன் மற்றும் பெற்றோர்கள் பங்கேற்றனர்.

First published:

Tags: Kanchipuram, Local News