காஞ்சிபுரம் முதன்மை கல்வி அலுவலர் வி.வெற்றிச்செல்வி தலைமையில், காஞ்சிபுரம் எஸ்.எஸ்.கே.வி ஆண்கள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், வரும் ஏப்ரல் மாதம் 6ஆம் தேதியன்று தொடங்க உள்ள 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகளை நடத்துவதற்கான தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், வினாத்தாள் மைய கட்டுக்காப்பாளர்கள் மற்றும் வழித்தட அலுவலர்கள் அனைவருக்கும் வழிகாட்டுதல் கூட்டம் நடைபெற்றது.
இதில் தேர்வுகள் எவ்வித புகார்களுக்கும் இடமின்றி சிறப்பான முறையில் நடத்திடவும், மாணவர்கள் மகிழ்ச்சியான முறையில் தேர்வு எழுத தேவையானபாதுகாப்பான தேர்வு அறைகள், தளவாடப் பொருட்கள் மற்றும் குடிநீர் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தி தர, தக்க ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
மேலும், தேர்வு வினாத்தாட்கள் பாதுகாப்பான முறையில் தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்லுதல்முதலான அனைத்து தேர்வு விதிகளும் விரிவாக விளக்கப்பட்டன. இந்த கூட்டத்திற்கு முன்னிலை வகித்த காஞ்சிபுரம் மாவட்டக் கல்வி அலுவலர் ( இடைநிலை) பொ.வள்ளிநாயகம்தேர்வு விதிமுறைகளை விரிவாக விளக்கினார்.
மேலும் படிக்க : பழனி கோவிலில் 281 காலி பணியிடங்கள்.. மாத சம்பளம் ரூ.1,13,500 வரை வாங்கலாம் - முழு விவரம் இதோ..!
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு/நலத்துறை மற்றும் தனியார் பள்ளிகள் என183 பள்ளிகளில் இருந்து 65 தேர்வு மையங்களில் 7,989 மாணவிகள் உள்ளிட்ட 10 ஆம் வகுப்பு பயிலும் 16,434 மாணவர்கள் தேர்வு எழுதுகிறார்கள். தேர்வு பணியில் சுமார் 1,300 ஆசிரியர்கள் பணியாற்ற உள்ளார்கள். முன்னதாக இக்கூட்டத்தில் முதன்மை கல்வி அலுவலக நேர்முக உதவியாளர் ஜீவானந்தம் வரவேற்க கூட்ட முடிவில் பள்ளித்துணை ஆய்வாளர் எஸ்.பாலச்சந்தர் நன்றி தெரிவித்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kancheepuram, Kanchipuram, Local News