ஹோம் /காஞ்சிபுரம் /

காஞ்சிபுரம் வாரிசு படத்தின் முதல் காட்சியை கொண்டாடித் தீர்த்த ரசிகர்கள்

காஞ்சிபுரம் வாரிசு படத்தின் முதல் காட்சியை கொண்டாடித் தீர்த்த ரசிகர்கள்

X
வாரிசு

வாரிசு கொண்டாட்டம்

Kanchipuram Varisu FDFS | காஞ்சிபுரத்தில் விஜய் ரசிகர்கள் வாரிசு படத்தின் முதல் காட்சியைக் கொண்டாடித் தீர்த்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kanchipuram, India

காஞ்சிபுரத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தை ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்து முதல் காட்சியை கொண்டாடி தீர்த்தனர்.

விஜய் நடிப்பில், தில்ராஜு தயாரிப்பில், வம்சி பைடிபைலி இயக்கியுள்ள புதிய படம் வாரிசு. படத்தில் சரத்குமார், பிரபு, ராஷ்மிகா மந்தனா, ஷாம், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருக்கிறார்கள். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்துள்ளார். தமன் இசையமைத்திருக்கிறார்.

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கிடையில் 'வாரிசு' படம் இன்று தமிழ்நாடு முழுவதும் முதல்காட்சியாக அதிகாலை 4 மணிக்கு தியேட்டர்களில் வெளியானது. அந்த வரிசையில் காஞ்சிபுரம் மாநகரில் உள்ள மடம் தெருவில் அமைந்துள்ள பாபு தியேட்டரில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முதல் நாள் முதல் காட்சியை கண்டு ரசித்தனர்.

திரையரங்கில் ரசிகர்கள் 

திரைப்படத்தை வரவேற்கும் விதமாக வண்ண வண்ண பட்டாசுகள் வெடித்தும் திரையரங்கில் வைக்கப்பட்டிருந்த விஜய் கட்டவுட் அருகே செல்ஃபி எடுத்துக் கொண்டும் புகைப்படம் எடுத்துக் கொண்டும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

திரையரங்கில் ரசிகர்கள்

சில ரசிகர்கள் விஜய் பேனர்களுக்கு பால் அபிஷேகமும் செய்தனர்.

துணிவு - வாரிசு ரிலீசுக்கு முன்பே அக்கப்‘போர்’ : போடி வெற்றி தியேட்டரில் ரசிகர்களிடையே பஞ்சாயத்து.. பேச்சுவார்த்தைக்கு வந்த போலீஸ்..

தொடர்ந்து ரசிகர்கள் விஜய் பெயரை உச்சரித்து ஆரவாரத்துடன் திரைப்படத்தை கண்டு களித்து வருகின்றனர்.

வாரிசு திரைப்படம் காஞ்சிபுரம் தியேட்டர்களில் வெளியான நிலையில் விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

செய்தியாளர்: கார்த்திக், காஞ்சிபுரம்.

First published:

Tags: Kanchipuram, Local News, Varisu