ஹோம் /காஞ்சிபுரம் /

வாரிசு படம் எப்படி இருக்கு? காஞ்சியில் ரசிகர்கள் கூறும் கருத்து என்ன?

வாரிசு படம் எப்படி இருக்கு? காஞ்சியில் ரசிகர்கள் கூறும் கருத்து என்ன?

X
வாரிசு

வாரிசு படம் குறித்து கருத்து தெரிவிக்கும் ரசிகர்

Varisu : கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படத்தின்  முதல்நாள் முதல்காட்சியை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரையரங்கில் குவிந்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kancheepuram (Kanchipuram), India

தெலுங்கு இயக்குனர் வம்சி பைடபள்ளி  இயக்கத்தில் நடிகர் விஜய் ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஜெயசுதா, யோகி பாபு உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள வாரிசு படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு  தயாரித்திருக்கிறார். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்துக்கு தமன் இசையமைத்திருக்கிறார்.

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கிடையில் 'வாரிசு' படம் இன்று தமிழ்நாடு முழுவதும் முதல்காட்சியாக அதிகாலை 4 மணிக்கு தியேட்டர்களில் வெளியாகியுள்ளது. அந்த வரிசையில் காஞ்சிபுரம் மாநகரில் உள்ள மடம் தெருவில் அமைந்துள்ள பாபு தியேட்டரில் இன்று வெளியானது.

ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோவை பார்க்க ஏராளமான ரசிகர்கள் திரையங்கில் குவிந்தனர். தியேட்டரை பேனர்கள் அலங்கரித்தன. பட்டாசுகளை வெடித்தும் ஆட்டம் பாட்டத்துடன் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பனியையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முதல் நாள் முதல் காட்சியை கண்டு ரசித்தனர். பின்னர் வாரிசு படம் குறித்து தங்களது விமர்சனங்களை தெரிவித்தனர்.

First published:

Tags: Actor Vijay, Kanchipuram, Local News, Tamil News, Varisu