முகப்பு /காஞ்சிபுரம் /

மார்கழி மாதம் முடிந்த பின்பும் தொடரும் பனிப்பொழிவு.. காஞ்சியில் வாகன ஓட்டிகள் அவதி..

மார்கழி மாதம் முடிந்த பின்பும் தொடரும் பனிப்பொழிவு.. காஞ்சியில் வாகன ஓட்டிகள் அவதி..

காஞ்சியில் தொடரும் பனிப்பொழிவு

காஞ்சியில் தொடரும் பனிப்பொழிவு

Kanchipuram News : மார்கழி மாதம் முடிந்த பின்பும் காஞ்சிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் தொடரும் பனி பொழிவால் சாலையில் செல்லும் வாகன வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Kanchipuram, India

பனிக்காலமான மார்கழி மாதம் முடிவடைந்த நிலையில் காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலை வேலைகளில் பனிப்பொழிவு தொடர்ந்து பெய்து வருகிறது.  அதன்படி அதிகாலையில் பெய்துவரும் பனிப்பொழிவால் குளிர்ச்சியாகவும், ரம்மியமாகவும் காட்சி அளித்து வருகிறது. இருந்தாலும் அதிகாலையில் ஏற்படும் பனிப்பொழிவின் காரணமாக பல்வேறு பணிகளுக்காக சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்களும் அவதிப்பட்டு வருகின்றனர்.

எதிரே வரும் வாகனங்கள் சரியாக தெரியாமலும் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்ட படியும் தான் வாகனங்களை இயக்குகின்றனர். மேலும் தொடர் பனிப்பொழிவின் காரணமாக காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் முதியவர்களும் குழந்தைகளும் சளி தொல்லையால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற அதிக அளவில் வருகை தருகின்றனர்.

First published:

Tags: Kanchipuram, Local News