முகப்பு /காஞ்சிபுரம் /

காஞ்சிபுரத்தில் கூடைப்பந்தை தட்டிக் கொண்டே ஸ்கேட்டிங்..! உலக சாதனை படைத்து அசத்திய சிறுவர்கள்.

காஞ்சிபுரத்தில் கூடைப்பந்தை தட்டிக் கொண்டே ஸ்கேட்டிங்..! உலக சாதனை படைத்து அசத்திய சிறுவர்கள்.

X
உலக

உலக சாதனை படைத்த சிறுவர்கள்

Kanchipuram District |காஞ்சிபுரத்தில் சிறுவர்கள் 1 மணி நேரம் கூடைப்பந்தை தட்டிக் கொண்டே தொடர்ந்து ஸ்கேட்டிங் செய்து நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து அசத்தினர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Kanchipuram, India

காஞ்சிபுரத்தில், ஐந்து வயது முதல் 12 வயது வரையிலான சிறுவர்கள் 1 மணி நேரம் கூடைப்பந்தை தட்டியவாறு தொடர்ந்து ஸ்கேட்டிங் செய்து நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து அசத்தினர்.

காஞ்சிபுரத்தில் செயல்படும் காஞ்சி ஸ்கேட்டிங் அகாடமியில் சிறுவர்-சிறுமியர் 70பேர் ஸ்கேட்டிங் பயிற்சி பெற்று வருகின்றனர். ஸ்கேட்டிங் பயிற்சி விளையாட்டு குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும், ஸ்கேட்டிங் பயிற்சி செய்யும் குழந்தைகளை ஊக்கப்படுத்தும் நோக்கத்துடனும் புதிய முயற்சியாக ஸ்கேட்டிங் செய்து கொண்டே, கூடைப்பந்தினை தட்டிச் செல்லும் விளையாட்டில் உலக சாதனை மேற்கொள்ளும் நிகழ்ச்சி காஞ்சிபுரத்தில் நடைபெற்றது.

இதில், ஸ்கேட்டிங் பயிற்சி மேற்கொள்ளும் ஒரு சிறுமி உட்பட 15 சிறுவர்-சிறுமிகள், ஒரு மணி நேரம் தொடர்ச்சியாக கைப்பந்தை தட்டியவாறு ஸ்கேட்டிங் செய்து உலக சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.இந்த சாதனைக்கான நிகழ்ச்சியில், நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் புத்தகத்தின் சார்பில் நடுவர்கள் நவீன்குமார்,கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டு பார்வையிட்டு ஆய்வு செய்து நோபல் உலக சாதனை புத்தகத்தில் பதிவு செய்தனர்.

Read More : தென்காசியில் ரயில் சோதனை ஓட்டம்.. 120 கி.மீ. வேகத்தில் பறந்த ரயில்!

உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டு வெற்றி பெற்று, நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த சிறுவர் சிறுமியர்களுக்கு திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் எஸ்.கே.பி சீனிவாசன் சான்றிதழ்களையும் கேடயத்தையும் வழங்கி பாராட்டி கௌரவித்தார்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக பொன்.சீனிவாசன், மருத்துவர்கள் கே.வி.பிரபு, ஆர்.சுரேஷ், வி.ஜெகநாதன், பெற்றோர்ள், ஸ்கேட்டிங் அகாடமியில் பயிற்சி பெறும் சிறுவர் சிறுமிகளும் கலந்து கொண்டு கைத்தட்டி ஆரவாரம் செய்து உலக சாதனையில் ஈடுபட்ட சிறுவர் சிறுமியை ஊக்கப்படுத்தினார்கள்.

First published:

Tags: Basket ball, Kanchipuram, Local News