முகப்பு /காஞ்சிபுரம் /

கந்தபுராணம் அரங்கேறிய காஞ்சி குமரக்கோட்டம் முருகன் கோவிலில் வெள்ளித் தேர் உற்சவம்..

கந்தபுராணம் அரங்கேறிய காஞ்சி குமரக்கோட்டம் முருகன் கோவிலில் வெள்ளித் தேர் உற்சவம்..

X
காஞ்சி

காஞ்சி

Kumarkottam Murugan Temple : கந்தபுராணம் அரங்கேறிய காஞ்சி குமரக்கோட்டம் முருகன் கோவிலில் வெள்ளித்தேர் உற்சவம் வெகு விமர்சையாக நடந்தது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Kanchipuram, India

கோவில் நகரம் என புகழ்பெற்று விளங்கும் காஞ்சிபுரத்தில் பஞ்சபூத ஸ்தலங்களில் 3000 ஆண்டுகள் பழமையான மண் ஸ்தலமாக விளங்கும் ஏகாம்பரநாதர் திருக்கோவிலுக்கும், சக்தி தலங்களில் முக்கிய தலைமாக விளங்கும் காஞ்சி காமாட்சி அம்மன் திருக்கோவிலுக்கும் இடையில் அமைந்துள்ளது கந்தபுராணம் அரங்கேறிய திருத்தலமான காஞ்சிபுரம் குமரக்கோட்டம் சுப்பிரமணிய சுவாமி முருகன் திருக்கோவில்.

இந்நிலையில், கந்தபுராணம் அரங்கேறிய குமரக்கோட்டம் முருகன் கோவிலில் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு வெள்ளித்தேர் உற்சவம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து, வெள்ளித்தேர் உற்சவத்தை ஒட்டி சுப்பிரமணிய சுவாமி முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சம்பங்கி பூ, ரோஜா பூ, ஏலக்காய், மாலைகள் அணிவித்து மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளித் தேரில் எழுந்தருள வைத்து பக்தர்கள் வடம் பிடித்து இழுத்துச் செல்ல, சிவ வாத்தியங்கள் முழங்க, காஞ்சி நகர 4 ராஜ வீதிகளில் வெள்ளித்தேர் வீதி உலா வந்தது.

இதையடுத்து, வெள்ளித்தேரில் வீதி உலா வந்த சுப்பிரமணிய சுவாமி முருகப்பெருமானை வழிநெடுக்கிலும் திரளான பக்தர்கள் திரண்டு வந்து காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வழிபட்டுச் சென்றனர்.

First published:

Tags: Kanchipuram, Local News