காஞ்சிபுரத்தில் பட்டுப்புடவை எடுக்க குவிந்த மக்களால், முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பட்டு நகரம் என்று அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில் பட்டுப்புடவைகளை வாங்கிட வெளிமாநில,மாவட்டங்களை சேர்ந்த மக்கள் அதிகளவிலானோர் வருகைதந்து பட்டு ஜவுளி புடவைகளை வாங்கி செல்வர்.
சித்திரை மாதம் சுபமுகூர்த்த நாட்கள் அதிகம் வரக்கூடிய நிலையில் மணமக்கள் வீட்டார்கள் பட்டு புடவைகளை வாங்கிட அதிகளவிலானோர் காஞ்சிபுரத்தில் படையொடுத்துள்ளனர். இந்நிலையில், இன்று அட்சய திதி மற்றும் குரு பெயர்ச்சி ஒட்டி தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திரா, கேரளா, கர்நாடகா போன்ற பிற மாநிலத்தில் இருந்து ஏராளமானூர் பட்டுப்புடவை எடுப்பதற்கு இன்று கூடியதால் போக்குவரத்து கடும் நெரிசல் ஏற்பட்டது.
இந்த வகையிலே பட்டு ஜவுளி கடைகள் மிகுந்த காஞ்சிபுரம் காந்தி சாலை பகுதியில் காலை முதலே பட்டு ஜவுளி புடவைகளை வாங்கிட அதிகளவில் வருகைதந்து தங்களுக்கு தேவையான பட்டுப்புடவைகளை வாங்கி சென்று வருகின்றனர். இவர்கள் வரக்கூடிய வாகனங்கள் அனைத்துமே பார்க்கிங் என்று சொல்லப்படகூடிய வாகன நிறுத்தமிடங்கள் இல்லாததால் சாலையிலேயே வாகனங்களை நிறுத்தவிட்டு சென்று விடுகின்றனர்.
இதையும் வாசிக்க: ஒரே மரத்தில் 4 வகையான மாங்கனிகள்.. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு படையெடுக்கும் மக்கள்!
இதன் காரணமாக சாலை முழுவதுமே போக்குவரத்து நெரிசலானது ஏற்பட்டு வாகனங்கள் ஊர்ந்து செல்ல கூடிய நிலையானது ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட காந்தி சாலை, தேரடி மூங்கில் மண்டபம், கீரை மண்டபம், மேட்டு தெரு உள்ளிட்ட முக்கிய பிரதான சாலைகள் போக்குவரத்து நெரிசலை கட்டுபடுத்தபடுத்த போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில் சாலையில் நிறுத்தப்படும் அந்த வாகனங்களினால் போக்குவரத்து சீர் செய்வதில் சிரமம் ஏற்பட்டு திணறி வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kancheepuram