முகப்பு /காஞ்சிபுரம் /

வாலாஜாபாத் தனியார் பள்ளியில் நடந்த அறிவியல் கண்காட்சியில் கீழடி பெருமையை போற்றிய மாணவர்கள்..

வாலாஜாபாத் தனியார் பள்ளியில் நடந்த அறிவியல் கண்காட்சியில் கீழடி பெருமையை போற்றிய மாணவர்கள்..

X
கண்காட்சியில்

கண்காட்சியில் கீழடி அகழாய்வை காட்சிப்படுத்தியதை ஆர்வத்துடன் பார்க்கும் மாணவர்கள்

Kanchipuram Walajabad | கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட கண்டுபிடிப்புகளின் மாதிரிகளை மாணவ மாணவிகளே தங்கள் கைப்பட தத்ரூபமாக உருவகப்படுத்தி காட்சிப்படுத்தினர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Kancheepuram (Kanchipuram), India

காஞ்சிபுரம் அருகே வாலாஜாபாத்தில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் மாபெரும் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் நகரில் இயங்கி வரும் தனியார் மேல்நிலைப் பள்ளியில் வருடம்தோறும் பிப்ரவரி மாதமானது அறிவியல் மாதமாக கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில் பள்ளி தொடங்கி 30-ம் ஆண்டுகள் நிறைவடைவதை ஒட்டி முத்து விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் விழாவின் ஒரு பகுதியாக மாணவ மாணவிகளால் சிறப்பு அறிவியல் கண்காட்சி நடத்தப்பட்டது. இக்கண்காட்சியை காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் துவக்கி வைத்தார்.

இதில் நீர் மேலாண்மை, தீ விபத்து பாதுகாப்பு, உலக அதிசயங்கள் குறித்து விஞ்ஞான உண்மைகள், விலங்கில் இருந்து பரிணாம வளர்ச்சி அடைந்த மனிதன், ஊட்டச்சத்து உணவுகள் என பல தலைப்புகளின் கீழ் கண்காட்சியை செயல் விளக்கத்துடன் காட்சிப்படுத்தியது அனைவரது உள்ளங்களையும் கொள்ளை கொள்ளும் வகையில் சிறப்பாக அமைந்திருந்தது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இக்கண்காட்சியில் ”கீழடி தமிழனின் வேரைத்தேடி”என்ற தலைப்பில் கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட கண்டெடுப்புகளின் மாதிரிகளை மாணவ மாணவிகளே தங்கள் கைப்பட தத்ரூபமாக உருவகப்படுத்தி காட்சிப்படுத்தியது கீழடிக்கே நேரடியாக சென்று பார்த்த அனுபவம் கிடைத்ததாக கண்காட்சியை காண வந்த மக்கள் வியந்து பாராட்டினர்.

தஞ்சை பெரிய கோயிலில் இவ்வளவு அதிசயங்கள் புதைந்துள்ளனவா என்று வியக்கும் அளவுக்கு தஞ்சை கோயிலின் மாதிரி உருவாக்கப்பட்டிருந்தது. நமக்கு தெரிந்தது தெரியாதது என கோயில் குறித்து மாணவர்கள் பொதுமக்களுக்கு விளக்கி கூறியது பெரும் வரவேற்பு பெற்றது. நம் பண்பாடு, கலாச்சாரம், வரலாறு, நம் வேர்கள் ஆகியவற்றை மறக்காத பொக்கிஷமாக அதை பாதுகாக்கும் இந்த தலைமுறை மாணவர்களை நாம் பார்க்கும் போது சற்றே வியந்து தான் போனோம்.

First published:

Tags: Kancheepuram, Local News