முகப்பு /காஞ்சிபுரம் /

தேசிய அறிவியல் தினத்தையொட்டி காஞ்சியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சி!

தேசிய அறிவியல் தினத்தையொட்டி காஞ்சியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சி!

X
கண்காட்சியை

கண்காட்சியை பார்வையிடும் பேராசிரியர் கிஷோர் 

Kanchipuram Science exhibition | காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு மாணவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்தும் வகையில் சிறப்பு அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Kanchipuram, India

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட, ஏகாம்பரபுரம் தெருவில் அமைந்துள்ள தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு மாணவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்தும் வகையில் சிறப்பு அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக தனியார் பல்கலைக்கழக அறிவியல் பேராசிரியர் முனைவர் கிஷோர் கலந்து கொண்டு அறிவியல் கண்காட்சியை துவக்கி வைத்தார்.

பின்னர் மாணவர்கள் செய்து வைத்திருந்த அறிவியல் படைப்புகளை பார்வையிட்டு மாணவர்களிடம் செயல் விளக்கத்தையும் கேட்டறிந்தார். பின்னர் மாணவர்களின் படைப்புகள் குறித்து அவரது கருத்துக்களை தெரிவித்தார்.

இது பற்றி பேராசிரியர் கூறுகையில் ”அறிவியல் என்பதும் தொழில்நுட்பம் என்பதும் வெவ்வேறு வகையை சார்ந்தது என்றும் அறிவியல் என்பது மூலப்பொருளாகும் தொழில்நுட்பம் என்பது வடிவமைப்பாகும் இதன் வேறுபாட்டை அறிவது தான் அறிவியல் அறிவு என்று மாணவர்கள் மத்தியில் எடுத்துரைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் சஞ்சீவி ஜெயராமன் மற்றும் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தங்கள் அறிவியல் செயல் திறனை காட்சிப்படுத்தியதை ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கண்டு களித்தனர்.

First published:

Tags: Kanchipuram, Local News