காஞ்சிபுரத்தில் சமத்துவ பொங்கல் விழா மாவட்ட ஆட்சியர் தலைமையில் கோலாகலமாக நடைபெற்றது.
தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு,அனைத்து ஊராட்சிகளிலும் சமத்துவ பொங்கல் அப்பகுதி மக்களுடன் கொண்டாட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்திரவிட்டதை தொடர்ந்து,இன்று காஞ்சிபுரம் மாவட்டம் திம்மசமுத்திரம் ஊராட்சிக்குட்பட்ட சித்தேரிமேடு கிராம சமத்துவபுரத்தில்,சமத்துவ பொங்கல் விழா மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் மா.ஆர்த்தி மகளிர் சுய உதவிக்குழுக்களால் போடப்பட்ட கோலங்களை பார்வையிட்டு,கிராமத்து பெண்களுடன் சேர்ந்து பொங்கல் வைத்தார். மேலும் அங்கு நடைபெற்ற கலைநிகழ்ச்சிகளான தெருக்கூத்து,பள்ளி மாணவ- மாணவியர்களின் நாட்டிய நிகழ்ச்சிகள் மற்றும் ஓவியப்போட்டி, உறியடித்தல்,கயிறு இழுத்தல் போட்டி போன்ற நிகழ்ச்சிகளை பார்வையிட்டார்.
போட்டியில் வெற்றி பெற்ற மகளீர் சுய உதவிக்குழுவினருக்கும், மாணவ-மாணவியர்களுக்கும்,தெருக்கூத்து கலைஞர்களுக்கும் பரிசுகளை வழங்கினார். பின்னர் விழா மேடையில் பேசிய மாவட்ட ஆட்சியர் டாக்டர் மா.ஆர்த்தி,காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 274 ஊராட்சிகள் உள்ளது.இந்த அனைத்து ஊராட்சியிலும் சமத்துவ பொங்கல் விழா நடத்தப்பட்டு வருகிறது என்றும் இவ்விழாவினை முன்னிட்டு, ஊராட்சிக்குட்பட்ட தெருக்கள்,கழிவுநீர் கால்வாய்களை சுத்தம் செய்யப்படவேண்டும் என வலியுறுத்தினார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
ஊக்கப்படுத்தவேண்டும்.ஊராட்சியில் அனைவரும் ஒன்று கூடி சமத்துவ உறுதிமொழியை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அனைவரும் வேற்றுமைகளை மறந்து அன்பையும்,சமூக நல்லிணக்கத்தையும் வளர்க்க வேண்டும் என அனைவரையும் கேட்டுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், காஞ்சிபுரம் ஒன்றிய குழுத்தலைவர் மலர்க்கொடி குமார்,காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழுத் துணைத்தலைவர் நித்தியா சுகுமார்,காஞ்சிபுரம் ஒன்றியகுழு துணைத்தலைவர் திவ்யபிரியா இளமது,உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) கோபி,வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kanchipuram, Local News, Pongal 2023