முகப்பு /காஞ்சிபுரம் /

2 லட்சம் டயர்களை சேமிக்கும் மிகப்பெரிய கிடங்கு... காஞ்சிபுரத்தில் திறப்பு..!

2 லட்சம் டயர்களை சேமிக்கும் மிகப்பெரிய கிடங்கு... காஞ்சிபுரத்தில் திறப்பு..!

X
சியட்

சியட் டயர்ஸ் சேமிப்பு கிடங்கு திறப்பு 

Kanchipuram District | காஞ்சிபும் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகேயுள்ள கண்ணன் தாங்கல் பகுதியில் தானியங்கி சேமிப்பு கிடங்கை அமைத்த சீயட் (CEAT) டயர் தொழிற்சாலை.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Kancheepuram (Kanchipuram), India

காஞ்சிபும் மாவட்டம் சுங்குவார்சத்திரம் - கண்ணன்தாங்கல் பகுதியில் சீயட் டயர் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு நாள்தோறும் 20,000 கார் டயர் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில் உற்பத்தி செய்த டயர்களை விற்பனை செய்வதற்கு தரத்துடன் உரிய நேரத்தில் அனுப்பி வைப்பதற்கு ஏதுவாக, முழுவதும் தானியங்கி முறையில் செயல்படும் இரண்டு லட்சம் டயர்களை கையாளக்கூடிய சேமிப்பு கிடங்கினை சீயட் டயர் தொழிற்சாலை நிறுவியுள்ளது.

கண்ணன் தாங்கல் தொழிற்சாலையில் நிறுவப்பட்டுள்ள இந்த தானியங்கி சேமிப்பு கிடங்கை,சீயட் தொழிற்சாலையின் முதன்மை செயல் அதிகாரி அர்ணாப் பானர்ஜி முன்னிலையில், ஹூண்டாய் நிறுவனத்தின் தொழில் பிரிவு தலைமை நிர்வாகி சுந்தர் திறந்து வைத்தார்.

இந்த தானியங்கி சேமிப்புக் கிடங்கை நிறுவுவதன் மூலம் மனிதவள பயன்பாடு குறைக்கப்படாமல், அடுத்த ஐந்து ஆண்டுகளில் படிப்படியாக இரண்டு அல்லது மூன்று மடங்கு அளவுகளில் சேமிப்பு கிடங்குகளை நிறுவவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. சியட் நிறுவனம் நவீன தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை தங்களின் தொழிற்சாலைகளில் இணைத்து கொண்டு செயல்படுத்தி வரும் நிலையில், புதிய சேமிப்பு கிடங்கினை நாட்டின் மிகப்பெரிய சேமிப்பு கிடங்காக மாற்றவும் திட்டமிட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த தானியங்கி சேமிப்புக் கிடங்கு மூலம் உற்பத்திசெய்யப்படும் டயர்களை தரம் குறையாமல் சரியான முறையில் லாரிகளில் ஏற்றி அனுப்பி வைத்து, வாடிக்கையாளர்களுக்கு திருப்தியை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க பட்டுள்ளது. வாகன உற்பத்தியில் ஒரிஜினல் உதிரிபாகங்களை உற்பத்தி செய்து வரும், ஹூண்டாய், ரெனால்ட் நிசான், டைம்லர், அசோக் லைலேண்ட், உள்ளிட்ட நிறுவனங்களுக்கு தனது டயர் தயாரிப்புகளை இந்த சியட் தொழிற்சாலையில் இருந்து அனுப்ப படுவதாகவும் தெரிவித்துள்ளது.

First published:

Tags: Kancheepuram, Local News