முகப்பு /காஞ்சிபுரம் /

எது எடுத்தாலும் ₹2 ரூபாய்.. காஞ்சியில் கலக்கும் சுதாகர் மெஸ்..!!

எது எடுத்தாலும் ₹2 ரூபாய்.. காஞ்சியில் கலக்கும் சுதாகர் மெஸ்..!!

X
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம்

Kanchipuram Road Side Famous Foodstall | காஞ்சிபுரத்தில் வெறும் ₹2 ரூபாய்க்கு சுட சுட  மசால் வடை, உளுந்த வடை,ஸ்வீட் போண்டா, கார போண்டா,வாழைக்காய் பஜ்ஜி உள்ளிட்ட தின்பண்டங்களை விற்பனை செய்து கலக்கி வருகிறது "சுதாகர் மெஸ்" எனும் சிற்றுண்டி கடை.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Kancheepuram (Kanchipuram), India

காஞ்சிபுரத்தில் வெறும் ₹2 ரூபாய்க்கு சுட சுட மசால் வடை, உளுந்த வடை, ஸ்வீட் போண்டா, கார போண்டா, வாழைக்காய் பஜ்ஜி உள்ளிட்ட தின்பண்டங்களை விற்பனை செய்து கலக்கி வருகிறது "சுதாகர் மெஸ்" எனும் சிற்றுண்டி கடை.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட காஞ்சிபுரம்-உத்திரமேரூர் சாலையில், கீழ்கேட் பகுதியில் கடந்த 40 வருடங்களாக இயங்கி வருகிறது சுதாகர் மெஸ். இந்த கடையில் பல்வேறு உணவுகள் விற்பனை செய்து வந்தாலும் கடந்த 40 வருடங்களாக மாலை நேரத்தில் இவர்களிடம் சுட சுட விற்பனையாகும் பஜ்ஜி, போண்டா, வடை உள்ளிட்ட தின்பண்டங்கள்தான் ஃபேமஸ் என்கிறார் கடை உரிமையாளர் திருநாவுக்கரசு.

இதில் சிறப்பு என்னவென்றால் இங்கு வெறும் ₹2 ரூபாய்க்கு மசால் வடை ,உளுந்து வடை, ஸ்வீட் போண்டா, கார போண்டா, வாழைக்காய் பஜ்ஜி உள்ளிட்ட திண்பண்டங்கள் விற்பனை செய்யப்படுவதால் ஏழை எளிய மக்கள் முதல் நடுத்தர மக்கள் வரை இங்கு சந்தோஷமாக வந்து திண்பண்டங்களை விரும்பி வாங்கி செல்கின்றனர். மேலும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை இங்கு விற்பனையாகும் பஜ்ஜி, போண்டா, வடைக்கு அடிமை என்று கூட சொல்லலாம்.

கடாயில் இருந்து பஜ்ஜி,போண்டா, வடை சுட்டு எடுத்து தட்டில் வைத்தால் போதும் உடனடியாக அடுத்த நொடியில் மொத்த பலகாரமும் விற்பனையாகி தீர்ந்து விடுகிறது. மாலை 6 மணிக்கு தொடங்கும் இந்த விற்பனை இரவு 8 மணிக்கு முடிவடைகிறது.

கையில் வெறும் ₹10 ரூபாய் இருந்தால் போதும் சுதாகர் மெஸ்க்கு வந்தால் வயிறு நிறைய சாப்பிட்டு செல்லலாம் என்பதே இங்கு வரும் எழை எளிய மக்களின் பதிவாக உள்ளது.

First published:

Tags: Food, Kancheepuram, Local News