ஹோம் /காஞ்சிபுரம் /

காஞ்சிபுரத்தில் ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் விழிப்புணர்வு பேரணி!

காஞ்சிபுரத்தில் ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் விழிப்புணர்வு பேரணி!

X
இருசக்கர

இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைக்கும் ஆட்சியர் ஆர்த்தி 

Kanchipuram awareness rally | காஞ்சிபுரத்தில் சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு நடைபெற்ற இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kanchipuram | Kancheepuram (Kanchipuram)

காஞ்சிபுரத்தில் ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக நடைபெற்ற இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

காஞ்சிபுரத்தில் சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவம் குறித்து வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான சாலை பாதுகாப்பு வாரம், "தூய்மை வார விழா 2023" என்ற தலைப்பின் கீழ் ஜனவரி 11ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை கடைப்பிடிக்கப்பட்டது.

இந்நிலையில் சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் அணிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஹெல்மெட் அணிவது குறித்த விழிப்புணர்வு இரு சக்கர வாகன பேரணியை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இப்பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்துக்கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து புறப்பட்டு நான்கு ராஜ வீதிகள் வழியாக சென்று மீண்டும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா காவலர் அரங்கத்தில் நிறைவு செய்து பொது மக்களுக்குஹெல்மெட் அணிவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் தினகரன், மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர்செல்வம், தனியார் ஓட்டுனர் பயிற்சி பள்ளி நிர்வாகிகள்,போக்குவரத்துத்துறையினர் என பலர் பங்கேற்றனர்.

First published:

Tags: Kanchipuram, Local News, Rally, Road Safety