முகப்பு /காஞ்சிபுரம் /

காஞ்சிபுரம் | பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராக கிராமசபை கூட்டத்தில் தீர்மானம்

காஞ்சிபுரம் | பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராக கிராமசபை கூட்டத்தில் தீர்மானம்

கிராம சபைக் கூட்டம்

கிராம சபைக் கூட்டம்

Parandur Airport | பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் கிராமத்தில் நடந்த குடியரசு தின கிராம சபை கூட்டத்தில் 4-வது முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Kanchipuram, India

பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து காஞ்சிபுரம் மாவட்டம் ஏகனாபுரம் கிராமத்தில் நடந்த குடியரசு தின கிராம சபை கூட்டத்தில் 4-வது முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கிராம மக்கள் கலந்து கொண்டு தீர்மானத்தை ஒரு மனதாக நிறைவேற்றினார்கள்.

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள வளத்தூர், நெல்வாய், தண்டலம், மேல்படவூர், நாகப்பட்டு, ஏகனாபுரம், எடையார்பாக்கம், அக்கம்மாபுரம், குணகரம்பாக்கம், சிங்கிலி பாடி, மகாதேவி மங்கலம் உள்ளிட்ட 13 கிராமங்களை உள்ளடக்கி சுமார் 4,750 ஏக்கர் பரப்பளவில் பசுமைவெளி விமான நிலையம் அமைப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் பசுமை வெளி விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம், பரந்தூர், தண்டலம், நெல்வாய், மேலேறி, உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம்

குடியிருப்புகளையும் வாழ்வாதாரங்களையும் இழக்கும் கிராம மக்கள் கிராம சபை கூட்டங்களில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தீர்மானங்களை நிறைவேற்றி வருகின்றனர் .

இந்நிலையில் ஆகஸ்ட் 15 சுதந்திர தினம், அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி, நவம்பர் 1 உள்ளாட்சி தினம், உள்ளிட்ட 3 கிராம சபை கூட்டங்களிலும், விளைநிலங்களையும் குடியிருப்புகளையும் இழக்கும் கிராமமான ஏகனாபுரம் கிராம மக்கள் பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 3-முறை தீர்மானங்களை நிறைவேற்றி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்திருந்தனர்.

இந்நிலையில் ஜனவரி 26 குடியரசு தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.

அதன்படி ஏகனாபுரம் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கிராம மக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு பசுமை வெளி விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய மாநில அரசுகள் திட்டத்தை கைவிட வேண்டும் என கோரிக்கை விடுத்து கிராமசபை கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானத்தை 4-வது முறையாக நிறைவேற்றி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.

மேலும் தொடர்ந்து 184 வது நாளாக பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கண்டன கோஷங்களை எழுப்பி தொடர் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

கிராம சபை கூட்டம் நடைபெறுவதை முன்னிட்டு பெரும் பதட்டம் ஏற்பட்டதை தொடர்ந்து ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிக்கு குவிக்கப்பட்டனர்.

சுபமுகூர்த்த மாதம்.. பட்டு நகரத்துக்கு படையெடுக்கும் மக்கள்..! திணறும் காஞ்சிபுரம்

பின்னர் போராட்ட குழுவினர் கூறுகையில் தற்பொழுது அடுத்த கட்ட அறிவிப்பு தமிழக அரசு அறிவிக்காத நிலையில் இதே போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும், அரசு அடுத்த கட்ட நடவடிக்கை தெரிவித்தால் அடுத்த கட்ட போராட்டங்கள் மாறும் என தெரிவித்தனர்.

First published:

Tags: Kanchipuram, Local News