முகப்பு /காஞ்சிபுரம் /

காஞ்சிபுரத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்ற நீச்சல் போட்டிகள்

காஞ்சிபுரத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்ற நீச்சல் போட்டிகள்

X
நீச்சல்

நீச்சல் போட்டியை துவக்கி வைக்கும் ஆட்சியர் மற்றும் எம்எல்ஏ 

Kancheepuram District Sports Event | காஞ்சிபுரம் பழைய ரயில்வே சாலையிலுள்ள பேரறிஞர் அண்ணா மாவட்ட விளையாட்டு மைதானத்தில் போட்டிகள் நடைபெற்று வருகிறது

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Kancheepuram (Kanchipuram), India

காஞ்சிபுரம் பேரறிஞர் அண்ணா மாவட்ட விளையாட்டு மைதானத்தில் பள்ளி கல்வி துறை சார்பில் நடத்தப்படும் மாநில அளவிலான நீச்சல் போட்டியை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி மற்றும் காஞ்சிபுரம் எம்எல்ஏ சி.வி.எம்.பி. எழிலரசன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி கொடியசைத்து போட்டியினை தொடங்கி வைத்தனர்.

காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாநில அளவிலான பாரதியார் தின / குடியரசு தின புதிய விளையாட்டுப் போட்டிகளான நீச்சல், வளைப்பந்து, ஜுடோ போட்டிகள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்றும் நாளையும்  நடைபெறவுள்ளது.

அதையொட்டி காஞ்சிபுரம் பழைய ரயில்வே சாலையிலுள்ள பேரறிஞர் அண்ணா மாவட்ட விளையாட்டு மைதானத்தில், நீச்சல் விளையாட்டு போட்டியினை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் மா.ஆர்த்தி மற்றும் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி கொடியசைத்து போட்டியினை தொடங்கி வைத்தனர்.இந்த நீச்சல் போட்டியில் 1,648 மாணவர்களும், 881மாணவியர்கள் என மொத்தம் 2,529 மாணவர்கள் கலந்துக்கொள்கின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும் தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் நீச்சல் போட்டி, ஜுடோ போட்டி, வளைப்பந்து போட்டிகளில் முதலிடங்களை பெற்ற 2,818மாணவர்களும் 1,928மாணவியர்களும் என 4,746 பேர் இங்கு நடைபெறும் போட்டிகளில் கலந்துக்கொள்கின்றனர்.

இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், முதன்மைக் கல்வி அலுவலர் (பொ) இராமன், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் முத்துவேல், அரசு அலுவலர்கள் மற்றும் மாணவ,மாணவியர்கள் என பலர் கலந்துக் கொண்டனர்.

First published:

Tags: Kancheepuram, Local News