முகப்பு /காஞ்சிபுரம் /

Ramadan 2023 : காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் சார்பில் சிறப்பு தொழுகை!

Ramadan 2023 : காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் சார்பில் சிறப்பு தொழுகை!

X
சிறப்பு

சிறப்பு தொழுகை 

Ramzan Special Prayer In Kanchipuram : ஈகைத்திருநாளை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் இஸ்லாமிய பெருமக்கள் அதிகம் வசிக்கும் பகுதியான ஒலி முகமது பேட்டையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் சார்பில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

  • Last Updated :
  • Kanchipuram, India

காஞ்சிபுரத்தில் இஸ்லாமிய பெருமக்கள் அதிகம் வசிக்கும் பகுதியான ஒலிமுகமது பேட்டையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் சார்பில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

இஸ்லாமிய பெருமக்கள் பெருமையுடன் கொண்டாடும் ரமலான் எனும் ஈகைத் திருநாள் நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. ரமலான் நோன்பு ஈகைத்திருநாளை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் இஸ்லாமிய பெருமக்கள் அதிகம் வசிக்கும் பகுதியான காஞ்சிபுரம் ஒலி முகமது பேட்டை பகுதியில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் சார்பில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

இந்த சிறப்புத் தொழுகையில் ஆண்கள் பெண்கள் என ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் புத்தாடைகள் அணிந்து வந்து, தொழுகை நடத்தினர். பின்னர், சகோதரத்துவத்தை வலியுறுத்தும் வகையில் ஒருவரை ஒருவர் கட்டி அணைத்து ரமலான் நோன்பு வாழ்த்து தெரிவித்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

பின்னர் அனைவரும் ஒன்று கூடி ரமலான் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு உலக மக்கள் நன்மை அடைய வேண்டி சிறப்பு பிரார்த்தனை செய்தனர். பின்னர் தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் சார்பில் ஏழை, எளிய முஸ்லிம்களுக்கு மளிகை உள்ளிட்ட பொருட்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

top videos
    First published:

    Tags: Kanchipuram, Local News, Ramzan