காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக நம்பப்படும் பிரசித்தி பெற்ற ஸ்ரீஆதிகேசவ பெருமாள் திருக்கோவில் உள்ளது. இந்நிலையில், ஸ்ரீபெரும்புதூரில் ஸ்ரீ ராமானுஜர் சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திர நாளன்று 1017ம் ஆண்டு பிறந்ததாக சொல்லப்படுகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டு ராமானுஜரின் 1006 வது அவதார உற்சவம் கடந்த 16ம் தேதி கோலகலமாக தொடங்கியது. ராமானுஜர் அவதார உற்சவத்தில் முக்கிய திருவிழாவாக கருதப்படுவது 9ம் நாள் உற்சவமான ராமானுஜரின் திருத்தேர் உற்சவமாகும்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
50 அடி உயரம் கொண்ட இத்திருத்தேரினை காண தமிழகம் மட்டுமின்றி அன்டை மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ராமானுஜரின் தரிசனம் பெற்றனர். திருத்தேரானது தேரடி வீதி,திருவள்ளூர் சாலை, திருமங்கையாழ்வார் தெரு மற்றும் முக்கிய வீதிகளின் வழியாக சுமார் 2 கி.மீ. பவணி வந்து நிலையை அடைந்தது. வழியெங்கும் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் ஆன்மிக அன்பர்கள் மூலம் மோர், பானகம், குளிர்பானங்கள் மற்றும் அன்னதானம் போன்றவை வழங்கப்பட்டன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kanchipuram, Local News