முகப்பு /காஞ்சிபுரம் /

காஞ்சிபுரம் ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மையத்தில் பட்டமளிப்பு விழா!

காஞ்சிபுரம் ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மையத்தில் பட்டமளிப்பு விழா!

X
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மையத்தில் பட்டமளிப்பு விழா

Rajiv Gandhi National Institute of Youth Development Convocation : காஞ்சிபுரம் மாவட்டம், ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மையத்தின் 3வது பட்டமளிப்பு விழாவில் 800க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியருக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாகூர் வழங்கினார்.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • Kanchipuram, India

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு பயிற்சி மையம் உள்ளது. இந்த பயிற்சி மையத்தின் 3வது பட்டமளிப்பு விழா மைய வளாகத்தில், பயிற்சி மைய இயக்குநர் சிப்நாத் டெப் தலைமையில் நடைபெற்றது.

இந்த விழாவில் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை மற்றும் தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக்சிங்தாக்கூர் சிறப்பு அழைப்பாளராக கலந்துக்கொண்டு முதுகலை பட்டப்படிப்பு முடித்த 274 மாணவ மாணவியர், ஆராய்ச்சி கல்வி முடித்த 6 மாணவ மாணவியர், தொழில்முறை கல்வி முடித்த 567 மாணவ மாணவியர் என மொத்தம் 847 மாணவ மாணவியருக்கு பதங்கங்கள் மற்றும் பட்டங்களை வழங்கினார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    இந்த நிகழ்வில் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் இளைஞர் விவகாரத் துறை இணைச் செயலாளர் ஸ்ரீநிதேஷ் குமார் மிஸ்ரா, இந்திய அரசின் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் இணைச் செயலாளரும் நிதி ஆலோசகரமான மனோஜ் சேத்தி, பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    First published:

    Tags: Kanchipuram, Local News