முகப்பு /காஞ்சிபுரம் /

காஞ்சிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் நண்பகல் நேரத்தில் திடீர் மழை.. பொதுமக்கள் மகிழ்ச்சி!

காஞ்சிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் நண்பகல் நேரத்தில் திடீர் மழை.. பொதுமக்கள் மகிழ்ச்சி!

X
மழை 

மழை 

Rain At Kanchipuram : காஞ்சிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் நண்பகல் நேரத்தில் திடீர் மழை பெய்தது, இதனால் கோடை வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

  • Last Updated :
  • Kanchipuram, India

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும்எனசென்னை வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. காஞ்சிபுரம் சுற்று வட்டார பகுதிகளில் கோடை வெப்பம் கடந்த சில நாட்களாக வாட்டி வதைத்து வந்தது.

காஞ்சியில் பெய்த மழை

இந்நிலையில் காலை முதலே கோடை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், இன்று நண்பகல் நேரத்தில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்துஓரிக்கை,செவிலிமேடு,மாகரல், காஞ்சிபுரம் மாநகர பகுதிகள், பேருந்து நிலையம், சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை,வாலாஜாபாத்,தம்மனூர்உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திடீரென கனமழை சுமார் அரைமணி நேரம் கொட்டி தீர்த்தது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

திடீரென பெய்த கனமழையால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் பாதிக்கப்பட்டாலும் கோடை வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டதால் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

First published:

Tags: Kanchipuram, Local News, Weather News in Tamil