முகப்பு /காஞ்சிபுரம் /

காஞ்சிபுரத்தில் புதிய பாரதம் எழுத்தறிவு திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றவர்களுக்கு எழுத்து தேர்வு!..

காஞ்சிபுரத்தில் புதிய பாரதம் எழுத்தறிவு திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றவர்களுக்கு எழுத்து தேர்வு!..

X
எழுத்துத்

எழுத்துத் தேர்வு

Kancheepuram News | காஞ்சிபுரம் மாவட்டத்தில் 434 மையங்களில் 8,089 பயனாளிகள் இந்த திட்டத்தில் பங்கேற்று பயன்பெற்றனர்.

  • Last Updated :
  • Kancheepuram (Kanchipuram), India

காஞ்சிபுரம் மாவட்டம் அங்கம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், புதிய பாரதம் எழுத்தறிவு திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றவர்களுக்கு எழுத்து தேர்வு நடைபெற்றது.

15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுதப் படிக்க தெரியாதவருக்கு அடிப்படை எழுத்தறிவு கல்வியை வழங்கிடும் நோக்கில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் எனப்படும், வயது வந்தோருக்கான கல்வி திட்டம் தமிழ்நாடு முழுவதும் நகர மற்றும் ஊரகப்பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வந்தது. அதன்படி, தினமும் இரண்டு மணி நேரம் வீதம் 6 மாத காலத்திற்கு இத்திட்டத்தின் கீழ் பயிற்சி வழங்கப்பட்டு சுமார் 200 மணி நேரம் கற்பித்தல் பயிற்சியானது தன்னார்வலர்கள் கொண்டு வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 434 மையங்களில் 8,089 பயனாளிகள் இந்த திட்டத்தில் பங்கேற்று பயன்பெற்றனர். இவர்களுக்கான எளிய எழுத்துத் தேர்வானது தமிழ்நாடு முழுவதும் பயனாளிகள் அனைவரும் வந்து எழுதக்கூடிய வகையில் பயனாளிகளின் வீடுகள் பள்ளிகள் அங்கன்வாடி மையங்கள் வயலில் வேலைப்பார்க்கும் இடங்கள் போன்ற இடங்களில் நடைபெற்றது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்நிலையில், காஞ்சிபுரம் ஒன்றியம் அங்கம்பாக்கம் கிராமத்தில் இரண்டு மையங்களில் நடைபெற்ற எழுத்தறிவு திட்ட வகுப்பில் 29 பயனாளிகள் பயிற்சி பெற்றனர். அவர்களுக்கான எழுத்துத் தேர்வானது அங்கம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது. தேர்வினை வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர் அருணா அவர்கள் பார்வையிட்டார்.

top videos

    தேர்வு எழுத வந்தவர்களை பள்ளியின் சார்பில் ஊராட்சி மன்றத்தலைவர் ஏழுமலை, துணைத்தலைவர் ஜெயசுதா முருகேசன், தலைமையாசிரியர் தணிகைஅரசு, அறிவியல் ஆசிரியர் சேகர், ஆசிரியர் சீனிவாசன், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் இளவரசி, தன்னார்வலர்கள் நந்தினி, பிரியங்கா, மஞ்சுபிரியா ஆகியோர் இனிப்புகள் மற்றும் எழுதுப்பொருட்கள் வழங்கி வரவேற்றனர். அனைவரும் தேர்வு எழுதியபின் எழுத்தறிவில்லாத தங்களுக்கு இந்த நல்லதொரு வாய்ப்பினை அளித்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

    First published:

    Tags: Kancheepuram, Local News