முகப்பு /காஞ்சிபுரம் /

காஞ்சிபுரத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்... மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்!..

காஞ்சிபுரத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்... மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்!..

X
மக்கள்

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 

Kancheepuram News | குறைதீர் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 345 மனுக்களை பெற்று அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அரசு துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

  • Last Updated :
  • Kancheepuram (Kanchipuram), India

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மையத்தில், பிரதி திங்கட்கிழமை தோறும் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அம்மனுக்கள் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கி தீர்வு காணப்பட்டு வருகிறது. அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மையத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து 345 மனுக்களை பெற்று அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அரசு துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும் காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் வட்டம், சின்னிவாக்கம் கிராமத்தை சேர்ந்த மாற்றுதிறனாளிக்கு மூன்று சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வாகனம் வழங்க மனு அளித்ததை தொடர்ந்து  ரூ.83,500/- மதிப்புள்ள மூன்று சக்கர வாகனத்தை மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை கொடை நிதியிலிருந்து வழங்கப்பட்டதை ஆட்சியர் ஆர்த்தி மாற்றுதிறனாளியிடம் வழங்கினார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமாக மாற்றுத்திறனாளி ஒருவருக்கு மூன்று சக்கர சைக்கிள் ரூபாய் 10,000/- மதிப்பில் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் கோ.சிவருத்ரய்யா, உதவி ஆட்சியர் அர்பித் ஜெயின், மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் சரவணகுமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் புண்ணியகோட்டி, தனி துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) ரா.சுமதி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

top videos
    First published:

    Tags: Kancheepuram, Local News