முகப்பு /காஞ்சிபுரம் /

சிறுதானியங்களில் இருந்து மதிப்பு கூட்டிய பொருள் தயாரிப்பு.. காஞ்சிபுரத்தில் ஒருநாள் பயிற்சி!

சிறுதானியங்களில் இருந்து மதிப்பு கூட்டிய பொருள் தயாரிப்பு.. காஞ்சிபுரத்தில் ஒருநாள் பயிற்சி!

சிறுதானியங்கள்

சிறுதானியங்கள்

Kanchipuram News : காஞ்சிபுரம் மாவட்டம், தேவரியம்பாக்கம் ஊராட்சியில் சிறுதானிங்களில் இருந்து மதிப்பு கூட்டிய பொருள் தயாரிப்பு பற்றிய ஒரு நாள் பயிற்சி அளிக்கப்பட்டது.

  • Last Updated :
  • Kanchipuram, India

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியம் தேவரியம்பாக்கம் ஊராட்சியில் சிறுதானிங்களில் இருந்து மதிப்பு கூட்டிய பொருள் தயாரிப்பு பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது.

இப்பயிற்சியை ஊராட்சி மன்றத் தலைவர் அஜய்குமார் தொடங்கி வைத்தார். இதில் தொழில் தொடங்க முன்னெடுக்க வேண்டிய நடைமுறைகள், நிதி மேலாண்மை, உற்பத்தி மற்றும் சந்தை வாய்ப்பு பற்றியும் சிறு தானியங்களில் இருந்து 12 வகையான மதிப்பு கூட்டிய பொருள்களை உருவாக்க செய்முறை பயிற்சியும் அளிக்கப்பட்டது. இதில் ஊராட்சியில் உள்ள சுயஉதவிக் குழுவைச் சேர்ந்த பெண்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

சிறுதானியங்களில் இருந்து மதிப்பு கூட்டிய பொருள் தயாரிப்பு

இப்பயிற்சியில் சுயதொழில் தொடங்குவதன் அவசியம், நிதி மேலாண்மை ஆகியன பற்றி மாநில ஊரகவளர்ச்சி பயிற்றுநர் சரோஜா விளக்கினார். சிறுதானியங்கள் தேர்வு மற்றும் மதிப்பு கூட்டு பொருட்களாக மாற்றி பொருளாதார ரீதியாக முன்னேற்றுவது குறித்து தேன்மொழி மற்றும் சங்கீதா ஆகியோரும் விளக்கினர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    இதில், பங்கேற்ற பயிற்சியாளர்கள் தேவரியம்பாக்கம் ஊராட்சி மக்களுக்கு இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த ஊராட்சி மன்ற நிர்வாகத்திற்கும், உதவி புரிந்த டெஸ்ட் அறக்கட்டளைக்கும் நன்றி தெரிவித்தனர். இந்த பயிற்சியில், துணைத்தலைவர் கோவிந்தராஜன், அரிமா சசிக்குமார், வார்டு உறுப்பினர் சாந்தி ஆகியோர் பங்கேற்றனர்.

    First published:

    Tags: Kanchipuram, Local News