முகப்பு /காஞ்சிபுரம் /

காஞ்சிபுர மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பூட்டிக்கிடந்த அரிசி கடையை திறக்க வந்த உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!!

காஞ்சிபுர மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பூட்டிக்கிடந்த அரிசி கடையை திறக்க வந்த உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!!

பூட்டை உடைத்து திருடப்பட்ட அரிசி கடை

பூட்டை உடைத்து திருடப்பட்ட அரிசி கடை

Kancheepuram Theft | அரிசி வியாபாரம் செய்ய வைத்திருந்த பணத்தை திருடி சென்ற கொள்ளையர்களுக்கு தீவிர வலைவீச்சு

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Kancheepuram (Kanchipuram), India

காஞ்சிபுரம் அருகே செவிலிமேடு பகுதியில் அரிசி கடையின் பூட்டை உடைத்து ரூ.13 லட்சம் திருட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள கனிகண்டீஸ்வரர் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன் (39)காஞ்சிபுரம் வந்தவாசி சாலை செவிலிமேடு பி.எஸ்.கே நகர் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அரிசி கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார்.  அரிசி வியாபாரம் செய்துவிட்டு நேற்றைய இரவு கடையை இளங்கோவன் வழக்கம் போல பூட்டிவிட்டு சென்றிருக்கிறார்.

இந்நிலையில் மீண்டும் இன்று காலையில் கடையை திறந்து திறக்க வந்த போது ஷட்டரின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து பார்த்தபோது அரிசி வியாபாரம் செய்ய வைத்திருந்த ரூ. 13 லட்சம் ரொக்க பணம் கல்லாப்பெட்டியிலிருந்து  திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதைத் தொடர்ந்து இளங்கோவன் காஞ்சிபுரம் தாலுக்கா காவல் நிலையத்திற்கு தகவல் அளித்ததின் பேரில் தாலுக்கா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சோதனை மேற்கொண்டு தடயவியல் துறையினர் மூலம் ஆதாரங்களை சேகரித்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

ஆட்கள் நடமாட்டம் உள்ள முக்கிய சாலை பகுதியிலேயே திருட்டு சம்பவம் நடைபெற்று இருப்பது அப்பகுதி வியாபாரிகள் இடைய பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

First published:

Tags: Crime News, Kancheepuram, Local News