முகப்பு /காஞ்சிபுரம் /

காஞ்சியில் "என் பாலிசி என் கையில்" பயிர் காப்பீடு திட்டம் துவக்கம்.. 

காஞ்சியில் "என் பாலிசி என் கையில்" பயிர் காப்பீடு திட்டம் துவக்கம்.. 

X
காஞ்சியில்

காஞ்சியில் "என் பாலிசி என் கையில்" பயிர் காப்பீடு திட்டம் துவக்கம்

Kanchipuram News : பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் (2022-23) என் பாலிசி என் கையில் இயக்கம் துவக்க விழா - 53 விவசாயிகளுக்கு காப்பீடு சான்றிதழ் வழங்கிய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Kanchipuram, India

விவசாய மாவட்டமான காஞ்சிபுரம் மாவட்டத்தின் முக்கிய பயிர்களாக நெல், உளுந்து, நிலக்கடலை, கரும்பு ஆகியவை அதிகப்படியான பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

புயல், மழை, வெள்ளம் மற்றும் கடும் வறட்சி போன்ற பேரிடர் காலங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்களில் மகசூல் இழப்பீடு ஏற்படும்போது விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்க திருந்திய பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் பயிர் காப்பீடு செய்வதன் மூலம் பொருளாதார இழப்பில் இருந்து தங்களை தர்காத்துக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் கடன் பெற்ற கடன் பெறாத விவசாயிகள் அனைவரும் பருவம் வாரியாக பயிர் காப்பீடு செய்ய மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக் கொள்ளப்பட்டது. நடப்பு 2022 - 23ம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு பயிர் காப்பீடு செய்ய பஜாஜ் அலையன்ஸ் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று 53 விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டுத் தொகைக்கான சான்றிதழ்களை மாவட்ட காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி விவசாயிகளுக்கு வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் (வேளாண்மை துறை) நேர்முக உதவியாளர் கணேசன் , வேளாண்மை துறை இணை இயக்குனர் இளங்கோவன் , பஜாஜ் காப்பீட்டு நிறுவனத்தின் அதிகாரி அஞ்சனிராஜ் , மேலாளர் உஷா மற்றும் விவசாயிகள் என ஏராளமான கலந்துகொண்டனர்.

First published:

Tags: Kanchipuram, Local News