ஹோம் /காஞ்சிபுரம் /

நெருங்கும் பொங்கல் பண்டிகை.. காஞ்சியில் மண்பானை உற்பத்தி தீவிரம்!

நெருங்கும் பொங்கல் பண்டிகை.. காஞ்சியில் மண்பானை உற்பத்தி தீவிரம்!

X
மண்பானை

மண்பானை தயாரிக்கும் மண்பாண்ட தொழிலாளி

Pongal Festival : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் பொங்கல் பானை தயாரிக்கும் பணி தீவிரம் அடைந்துள்ளது‌.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Kancheepuram (Kanchipuram), India

தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகை கிராமங்கள் தொடங்கி நகா்புறம் வரை வெகு விமரிசையாக அனைவரும் கொண்டாடி மகிழ்வது வழக்கம். தமிழா்களின் பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் வெளிப்படுத்தும் விதமாக பொங்கல் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் முதல் நாள் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

பொங்கல் பண்டிகையின் போது பச்சரிசி வெல்லம்,நெய் சேர்த்து மண் பானையில் பொங்கல் வைத்து சூரிய பகவானுக்கு படையல் வைத்து வணங்கி விமா்சையைாக கொண்டாடி உறவினர்களுடன் உண்டு மகிழ்வது தமிழா்களின் மரபு ஆகும்.

இந்நிலையில், பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாள்களே உள்ள நிலையில் காஞ்சிபுரத்தில் உள்ள திருக்காளிமேடு பகுதியில் பொங்கல் வைக்க பயன்படும் மண் பானைகள் தயாரிக்கும் பணியில் மண்பாண்ட தொழிலாளிகள் தங்கள் குடும்பத்தினருடன் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தேர்ந்தெடுக்கப்பட்ட ஏரிகளில் மண்ணை கொண்டு வந்து பக்குவபடுத்தி பிசைந்து திருவை எனும் மண்பானை செய்யும் எந்திரத்தில் வைத்து சுற்றி மண் பானைகளை வடிவமைத்து செய்கின்றனர். பின்னர் அதனை சுமார் மூன்று மணி நேரம் நிழலில் காயவைத்து சூளையில் வைத்து அடுக்கி சுட்டு மண் பானைகள் தயாரிக்கின்றனர்.

சூளையில் சுட்ட பானைகளுக்கு வண்ணம் தீட்டி காஞ்சிபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் மற்ற மாவட்டங்களுக்கும்,வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கின்றனர்.

வருடம் முழுவதும் இவர்கள் மண் பாண்டங்கள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டாலும் விநாயகர் சதுர்த்தி, கார்த்திகை தீபம்,பொங்கல் பண்டிகை, போன்ற பண்டிகை காலங்களில் தான் ஓரளவுக்கு வருமானம் கிடைக்கும்.

இந்த பண்டிகை நாட்களில கடினமாக உழைத்து தான் தங்களின் வாழ்வாதாரத்தை காத்து வருகின்றனர். அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தற்போது பொங்கலுக்கு தேவையான மண் பானை தயாரிக்கும் பணி சூடுபிடித்துள்ளது.

நவீன காலத்தில் பொங்கல் பண்டிகையை சில்வர், பித்தளை, அலுமினியம் உள்ளிட்ட பாத்திரங்களிலும் ஒரு சிலர் குக்கரில் பொங்கல் வைக்கும் முறையாகவும் மாற்றி வருகின்றனர்.

இதனால் பாரம்பரிய முறை மாறி மண் பானைகளுக்கான தேவை குறைந்துள்ளது. இதன் காரணமாக மண்பாண்ட தொழிலை நம்பி இருக்கும் ஏராளமான தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து வரக்கூடிய நிலை ஏற்பட்டு உள்ளது.

அதனால் தமிழர்களின் பண்டிகையான பொங்கல் திருநாளில் பாரம்பரியத்தை மறக்காமல், மண்பாண்ட தொழிலாளர்கள் செய்து வைத்துள்ள மண்பானைகளை வாங்கி பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைத்து கொண்டாடி, மண்பாண்ட விற்பனையை அதிகரித்து, தங்களின் வாழ்வாதாரத்தை காத்திட வேண்டும் என மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

First published:

Tags: Kancheepuram, Local News, Pongal, Tamil News