ஹோம் /காஞ்சிபுரம் /

காஞ்சிபுரத்தில் உள்ள பள்ளியில் கோலாகலமாக நடைபெற்ற பொங்கல் விழா

காஞ்சிபுரத்தில் உள்ள பள்ளியில் கோலாகலமாக நடைபெற்ற பொங்கல் விழா

பொங்கல் திருவிழாவில் உறியடிக்கும் மாணவன் 

பொங்கல் திருவிழாவில் உறியடிக்கும் மாணவன் 

Kanchipuram School Pongal | உறியடிக்கும் போட்டி, நடன போட்டி, பேச்சுப்போட்டி, உணவு போட்டி, கரகாட்டம், ஒயிலாட்ட போட்டிகள் நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kanchipuram, India

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட ஓரிக்கை பகுதியில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் பொங்கல்  கொண்டாட்டம்  கோலாகலமாக நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட ஓரிக்கை பகுதியில் தனியார் மேல்நிலை பள்ளி இயங்கி வருகிறது.தமிழர் திருநாள் ஆன பொங்கல் பண்டிகையை யொட்டி பள்ளி வளாகத்தில் பொங்கல் விழாவானது மிக கோலாகலமாக நடைபெற்றது. இந்த பொங்கல் விழாவில் பள்ளி மாணவ,மாணவிகள் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி சேலை புத்தாடைகளை அணிந்துக்கொண்டு புத்தம் புது பானையில் புதுப்பானையில் புத்தரிசி,வெள்ளம், ஏலக்காத், முந்திரி, திராட்சை கலந்து பொங்கல் வைத்து படைத்தும், பொங்கல் பொங்கி வரும்போது பொங்கலோ பொங்கல் என்று பொங்கல் கோசம் எழுப்பி பொங்கல் பண்டிகையை வெகு விமரிசையாக கொண்டாடினர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

குறிப்பாக இந்த பொங்கல் விழாவில் கண்களை கட்டிக்கொண்டு உறியடிக்கும் போட்டி, நடன போட்டி, பேச்சுப்போட்டி, உணவு போட்டி, கரகாட்டம், ஒயிலாட்டம், பேண்ட் வாத்தியங்கள் என நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்று பொங்கல் பண்டிகையை மிக உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

First published:

Tags: Kanchipuram, Local News