முகப்பு /காஞ்சிபுரம் /

அனைத்து காவல்துறை வாகனங்களை தீடீரென ஆய்வு செய்த காஞ்சிபுரம் எஸ்.பி!!!

அனைத்து காவல்துறை வாகனங்களை தீடீரென ஆய்வு செய்த காஞ்சிபுரம் எஸ்.பி!!!

X
காவல்

காவல் துறையினரின் வாகனங்களை ஆய்வு செய்யும் எஸ்.பி.

Kancheepuram SP Inspection Police Vehicles | ஜீப்புகள்,கார்கள், வேன்கள், மினி பேருந்துகள், என சுமார் 50 க்கும் மேற்பட்ட வாகனங்கள் காவல் கண்காணிப்பாளர் சுதாகர் ஆய்வு செய்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Kancheepuram (Kanchipuram), India

காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள அனைத்து காவல்துறை வாகனங்களையும் ஒரே இடத்திற்கு எடுத்து கொண்டு வர உத்தரவிட்டு  மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுதாகர் ஆய்வு மேற்கொண்டார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கட்டுப்பாட்டில் சிவகாஞ்சி, விஷ்ணு காஞ்சி,காஞ்சிபுரம் தாலுக்கா, பாலுசெட்டி, சத்திரம், மாகரல், உத்திரமேரூர், பெருநகர், வாலாஜாபாத், சாலவாக்கம், ஒரகடம், சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதூர், அனைத்து மகளிர் காவல் நிலையம் காஞ்சிபுரம், அனைத்து மகளிர் காவல் நிலையம் ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட 14 காவல் நிலையங்களும், ஆயுதப்படை பிரிவும் உள்ளது.

இங்கு காவலர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை பயன்படுத்தும் மோட்டார் சைக்கிள்கள், ஜீப்புகள்,கார்கள், வேன்கள், மினி பேருந்துகள், என சுமார் 50 க்கும் மேற்பட்ட வாகனங்கள் உள்ளன. இந்த வாகனங்களை ஆண்டுக்கு ஒரு முறை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஆய்வு செய்வது வழக்கம்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காவல்துறையினர் பயன்படுத்தும் அனைத்து அரசு வாகனங்களையும் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா காவல் அரங்கு மைதானத்திற்கு கொண்டுவரச் சொல்லி காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் மா.சுதாகர் ஆய்வு கொண்டார்.

காவல்துறை வாகனங்களை நேரில் பார்வையிட்ட மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுதாகர் வாகனங்களின் செயல் தன்மை குறித்தும், காப்பீடு, அவசர கால பொருட்கள், முதலுதவி பெட்டிகள், சைரன் ஒலிபெருக்கிகள், உள்ளிட்டவைகளை பார்வையிட்டு காவல்துறை வாகன ஓட்டுநர்களிடம் முறையாக பராமரிக்கப்படுகிறதா என குறைகளை கேட்டறிந்தார். ஆய்வின்போது காஞ்சிபுரம் ஏ டி எஸ் பி,ஆயுதப் படைப்பிரிவு டிஎஸ்பி,மற்றும் ஆய்வாளர்கள் உடன் இருந்தனர்.

First published:

Tags: Kancheepuram, Local News