முகப்பு /காஞ்சிபுரம் /

காஞ்சிபுரம் | ஆட்சியர் முன்பு திடீரென கையை ப்ளேடால் கிழித்துக் கொண்ட நபரால் பரபரப்பு

காஞ்சிபுரம் | ஆட்சியர் முன்பு திடீரென கையை ப்ளேடால் கிழித்துக் கொண்ட நபரால் பரபரப்பு

கையை கிழித்துக் கொண்ட நபர்

கையை கிழித்துக் கொண்ட நபர்

Kanchipuram | காஞ்சிபுரத்தில் ஆட்சியர் தலைமையிலான குறைதீர் கூட்டத்தின்போது ஒருவர் பிளேடால் கையை கிழித்துக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Kanchipuram, India

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தாலுகா வெள்ளாரை கிராமத்தைச் சேர்ந்தவர் நீலகண்டன். இவர் கடந்த 2016-ம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த தனசேகர் என்பவரிடம் 50 சென்ட் நிலத்தை கிரயம் பெற்று பத்திரப்பதிவு செய்துள்ளார்.

இந் நிலையில் பத்திரப்பதிவு செய்த நிலத்திற்கு பட்டா கேட்டு கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் மனு வழங்கி வருகிறார். மனுவினை பெற்றுக் கொள்ளும் வருவாய் துறை அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் உள்ளதாகவும், பட்டா வழங்குவதற்கு நில அளவையர் லஞ்சம் கேட்பதாகவும், கூறி காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தியிடம் மனு அளித்தார்.

மனு மீது உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்த நிலையில், திடீரென நீலகண்டன் தான் கொண்டு வந்திருந்த பிளேடால் கையை கிழித்துக்கொண்டு, மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வற்புறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டார்.

உடனடியாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த காஞ்சிபுரம் தாலுக்கா போலீசார் நீலகண்டனை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இருந்து வெளியே அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

கனிமவளத்துறை அதிகாரி முறைகேட்டில் ஈடுபடுவதாக காஞ்சிபுரம் ஆட்சியரிடம் லாரி உரிமையாளர்கள் புகார்..

மேலும் நீலகண்டன் பட்டா கேட்கும் நிலத்தின் மீது, சொந்தம் கொண்டாடி தனியார் அறக்கட்டளை வழக்கு தொடுத்து வழக்கு விசாரணை நிலுவையில் உள்ள நிலையில் பட்டா வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக வருவாய்த்துறையினர் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

First published:

Tags: Kanchipuram, Local News