முகப்பு /காஞ்சிபுரம் /

பேராசிரியர் அன்பழகன் ‘பள்ளி மேம்பாட்டு திட்டம்’ கல்வித்துறையில் ஒரு புரட்சி - காஞ்சிபுரம் எம்.எல்.ஏ எழிலரசன் புகழாரம்

பேராசிரியர் அன்பழகன் ‘பள்ளி மேம்பாட்டு திட்டம்’ கல்வித்துறையில் ஒரு புரட்சி - காஞ்சிபுரம் எம்.எல்.ஏ எழிலரசன் புகழாரம்

X
Kancheepuram

Kancheepuram MLA Ezhilarasan | காஞ்சிபுரத்தில் தாமல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ₹27,72,000 மதிப்பீட்டில் வகுப்பறை கட்டிடம் கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Kancheepuram (Kanchipuram) | Kanchipuram

தமிழக அரசின் சார்பில் அரசு பள்ளிகளில் புதிய வகுப்பறைகள் கட்டுவதற்காக பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாடு திட்டம் துவக்கப்பட்டு உள்ளது. வேலூர் மாவட்டம் காட்பாடியில் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டம் துவக்க விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு திட்டத்தை தொடங்கி வைத்து, தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசு பள்ளிகளில் புதிய வகுப்பறைகள் கட்டுவதற்கான பணிகளை காணொளி காட்சி வாயிலாக துவக்கி வைத்தார்.

அதன்படி காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியம், தாமல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 27, லட்சத்து 72,000 ரூபாய் மதிப்பீட்டில் 2 வகுப்பறைகள் கட்டிடம் கட்டும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக துவக்கி வைத்தார்.

தாமல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கட்டிடம் கட்டும் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக தொடங்கி வைத்த நிலையில் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் ஆகியோர் அடிக்கல்  நாட்டி பணிகளை துவக்கி வைத்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

பின்னர் திட்டம் குறித்து காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் கூறுகையில் ”இந்த திட்டம் கல்வித்துறையில் ஒரு மாபெரும் புரட்சி என்றும், மரத்தடியில் மற்றும் சிதலமடைந்த கட்டிடத்தில் மாணவர்கள் கல்வி கற்கும் அவல நிலை இனி இல்லை “ என்று பெருமிதத்துடன் தெரிவித்தார். இனிமேல் ஒரு தரமான கட்டிடத்தில் நல்ல வகுப்பறையில் நல்ல சூழலில் அவர்கள் கல்வி கற்க்கிற நிலையை உருவாக்கும் மிகப்பெரிய புரட்சியாக இத்திட்டம் உள்ளது” எனதெரிவித்தார்.

First published:

Tags: Kancheepuram, Local News