முகப்பு /காஞ்சிபுரம் /

பேரறிஞர் நினைவு தினம்.. காஞ்சிபுரம் அண்ணா நினைவு இல்லத்தில் மரியாதை செலுத்திய அரசியல் பிரமுகர்கள்..

பேரறிஞர் நினைவு தினம்.. காஞ்சிபுரம் அண்ணா நினைவு இல்லத்தில் மரியாதை செலுத்திய அரசியல் பிரமுகர்கள்..

X
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம்

Kanchipuram Anna Memorial House | காஞ்சிபுரத்திலுள்ள அண்ணா நினைவு இல்லத்தில் அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Kanchipuram, India

பேரறிஞர் அண்ணா பிறந்த ஊரான காஞ்சிபுரத்தில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் உள்ள திருவுருவ சிலைக்கு காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் மற்றும் அதிமுக ஈபிஎஸ், ஓபிஎஸ் அணியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், திமுகவை தோற்றிவித்தவருமான அண்ணாவின் 54வது நினைவு நாள் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. பேரறிஞர் அண்ணா பிறந்த ஊரான காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா வாழ்ந்து மறைந்த அவரது நினைவு இல்லத்தில் உள்ள அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி, மாவட்ட வருவாய்த்துறை அலுவலர்சிவ ருத்ரய்யா மற்றும் அரசு அதிகாரிகள்மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதனைத்தொடர்ந்து அதிமுக எடப்பாடி பழனிசாமி அணி சார்பில் மாவட்ட செயலாளர் வி.சோமசுந்தரம் தலைமையில் கழக அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் மற்றும் அதிமுக நிர்வாகிகளும் அதேபோல் அதிமுக ஓ.பன்னீர் செல்வம் அணி சார்பில் மாவட்ட செயலாளர் ஆர்.வி.ரஞ்சித்குமார் தலைமையில் நிர்வாகிகளும் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

First published:

Tags: Kanchipuram, Local News