முகப்பு /காஞ்சிபுரம் /

காஞ்சிபுரத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - நலத்திட்ட உதவிகளை வழங்கிய கலெக்டர்..!

காஞ்சிபுரத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - நலத்திட்ட உதவிகளை வழங்கிய கலெக்டர்..!

X
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம்

Kanchipuram News : காஞ்சிபுரத்தில் நடைபெற்ற வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பயனாளிகளுக்கு ரூ.24,75,000/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் டாக்டர் மா.ஆர்த்தி வழங்கினார்.

  • Last Updated :
  • Kancheepuram (Kanchipuram), India

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவல வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் பிரதி திங்கட்கிழமை தோறும் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அம்மனுக்கள் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கி தீர்வு காணப்பட்டு வருகிறது.

அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவு மையத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது.

இக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து 361 மனுக்களை பெற்று அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அரசு துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்கள்.

மேலும் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், காஞ்சிபுரம் வட்டம், ஏனாத்தூர், கூரம், ஆரியம்பெரும்பாக்கம், அய்யங்கார்குளம் கிராமங்களை சார்ந்த 11 மாற்றுதிறனாளி பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.24,75,000/- மதிப்பிலான இலவச வீட்டுமனைப் பட்டாக்களை மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி வழங்கினார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.சிவருத்ரய்யா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பாபு, தனி துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) ரா.சுமதி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    First published:

    Tags: Kancheepuram, Kanchipuram, Local News