முகப்பு /செய்தி /காஞ்சிபுரம் / சாலையில் கொட்டிக்கிடந்த வெங்காய மூட்டைகள்... போட்டி போட்டு அள்ளிச் சென்ற பொதுமக்கள்...!

சாலையில் கொட்டிக்கிடந்த வெங்காய மூட்டைகள்... போட்டி போட்டு அள்ளிச் சென்ற பொதுமக்கள்...!

வெங்காய மூட்டைகள்

வெங்காய மூட்டைகள்

Chennai onion on road | குன்றத்தூர் அருகே சாலையின் ஓரத்தில் நேற்று மாலை 6 மணியளவில்  மூட்டை, மூட்டையாக வெங்காய முட்டைகள் கொட்டி கிடந்தது.

  • Last Updated :
  • Kundrathur, India

வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சர்வீஸ் சாலையில் கொட்டி கிடந்த வெங்காய மூட்டைகளை பொதுமக்கள் அள்ளி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சர்வீஸ் சாலை, குன்றத்தூர் அருகே சாலையின் ஓரத்தில் நேற்று மாலை 6 மணியளவில்  மூட்டை, மூட்டையாக வெங்காய முட்டைகள் கொட்டி கிடந்தது. அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் இதனை கண்டதும் வாகனங்களை நிறுத்திவிட்டு ஓடி சென்று ஒவ்வொருவராக வெங்காய மூட்டைகளை எடுக்க ஆரம்பித்தனர்.

யாரும் கேட்க வராததால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் தங்களுக்குள் போட்டி போட்டு கொண்டு சாலையின் ஓரத்தில் கொட்டி கிடந்த வெங்காய மூட்டைகளை தங்களது இரு சக்கர வாகனத்தில் எடுத்து வைத்து கொண்டு வேக, வேகமாக உற்சாகத்துடன் கிளம்பி சென்றனர்.

சிலர் தங்களது இருசக்கர வாகனத்தில் மூன்று முதல் நான்கு மூட்டைகளை சர்வ சாதாரணமாக எடுத்து கொண்டு சென்றனர். பொதுமக்கள் எடுத்த வரை யாரும் வந்து கேட்காததால் அந்த வழியாக வந்த பொதுமக்கள் மிகுந்த உற்சாகத்துடன் அங்கு கொட்டி வைக்கப்பட்டிருந்த வெங்காய மூட்டைகளை நொடி பொழுதில் தூக்கி சென்றனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. வெங்காய மூட்டைகளை கொட்டி சென்றது யார், எதனால் கொட்டினார்கள் என்பது குறித்து குன்றத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செய்தியாளர்: சோமசுந்தரம், குன்றத்தூர்

First published:

Tags: Chennai, Local News, Onion