ஹோம் /காஞ்சிபுரம் /

காஞ்சியில் பொங்கல் பரிசு தொகுப்பை வாங்க அதிகாலையிலேயே குவிந்த மக்கள்!

காஞ்சியில் பொங்கல் பரிசு தொகுப்பை வாங்க அதிகாலையிலேயே குவிந்த மக்கள்!

X
பொங்கல்

பொங்கல் தொகுப்பு

Kanchipuram pongal gift distribution | காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 665 நியாய விலைக் கடைகளில் 3, லட்சத்து 93 ஆயிரத்து 24 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கும் பணி தொடங்கியது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kanchipuram, India

காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிகளில் காலையிலேயே நியாய விலை கடைகளில் வரிசையில் நின்று காத்திருந்து பொங்கல் பரிசு தொகுப்பை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.

தமிழர்கள் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையை அனைத்து தரப்பு மக்களும் பாகுபாடு இன்றி கொண்டாடி மகிழ்ந்திட தமிழக அரசின் சார்பில் நியாய விலைக் கடைகளில் அரிசி வாங்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி,ஒரு கிலோ சர்க்கரை, முழு செங்கரும்பு, மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் உள்ளிட்டவைகளை பொங்கல் பரிசு தொகுப்பாக வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி நேற்று தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் துவக்கி வைத்த திட்டத்தினை தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நியாய விலை கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பை அமைச்சர்களும், எம்பிகளும், எம்எல்ஏக்களும், உள்ளாட்சி பிரதிநிதிகளும், குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் பணியை துவக்கி வைத்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 665 நியாய விலைக் கடைகளில் 3, லட்சத்து 93 ஆயிரத்து 24 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கும் பணியை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, காஞ்சிபுரம் எம்பி செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள் க சுந்தர்,

சிவிஎம்பி. எழிலரசன், ஆகியோர் தமிழக அரசின் நலத்திட்டங்களை எடுத்துக் கூறி பொங்கல் பரிசுத் தொகப்பினை குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் பணியை துவக்கி வைத்தனர்.

நியாய விலை கடைகளில் கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில் நாள்தோறும் குறிப்பிட்ட பகுதி மக்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள நியாய விலை கடைகளில் டோக்கன் பெற்றுள்ள குடும்ப அட்டை தாரர்கள் காலையிலேயே நீண்ட வரிசையில் நியாயவிலைக் கடைகளில் காத்திருந்து பொங்கல் பரிசு தொகுப்பான பச்சரிசி, சர்க்கரை, செங்கரும்பு, 1000 ரூபாய் ரொக்கப் பணத்தை மகிழ்ச்சி பொங்க ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.

First published:

Tags: Kanchipuram, Local News, Pongal 2023, Pongal Gift