ஹோம் /காஞ்சிபுரம் /

கடைசி நிமிடத்தில் பொங்கல் ஷாப்பிங் செய்த பொதுமக்கள்.. காஞ்சிபுரம் காந்தி சாலையில் நெரிசல்..

கடைசி நிமிடத்தில் பொங்கல் ஷாப்பிங் செய்த பொதுமக்கள்.. காஞ்சிபுரம் காந்தி சாலையில் நெரிசல்..

X
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம்

Pongal 2023 : பொங்கல் பண்டிகைக்காக புத்தாடை, துணிமணிகள் வாங்கிட காஞ்சிபுரத்தில் குவிந்த மக்கள் கூட்டம்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kanchipuram, India

தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் கொண்டாடப்படுவதையொட்டி புத்தாண்டைகள் அணிந்து புது பானையில் பொங்கல் வைத்து படையல் இட்டு சூரிய பகவானை வணங்குவது வழக்கம். அந்த வகையில் தமிழர் திருநாளாம் தைப்பொங்கலையொட்டி புத்தாடைகள், துணிமணிகள் உள்ளிட்டவற்றை தங்கள் குடும்பத்தினருக்கு வாங்கி கொடுத்து மகிழ்ந்திட காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் காஞ்சிபுரம் நகரின் முக்கிய வியாபார ஸ்தலமாக விளங்கும் காந்தி சாலையில் குவிந்தனர்.

இதனைத்தொடர்ந்து, காந்தி சாலையில் உள்ள ஜவுளிக்கடைகளிலும், சாலை ஓர கடைகளிலும் தங்கள் குடும்பத்துடன் வந்து புத்தாடைகளை வாங்கிச் சென்று வருகின்றனர். புத்தாடைகள் வாங்கிட ஏராளமானோர் ஒரே நேரத்தில் காஞ்சிபுரம் பகுதியில் குவிந்ததால் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் போலீசார் பாதுகாப்பு பணிகளையும் மேற்கொண்டனர்.

First published:

Tags: Kanchipuram, Local News, Pongal 2023