முகப்பு /காஞ்சிபுரம் /

காஞ்சியில் ஓய்வூதியதாரர்கள் குறை தீர்க்கும் கூட்டம்.!

காஞ்சியில் ஓய்வூதியதாரர்கள் குறை தீர்க்கும் கூட்டம்.!

ஓய்வூதியதாரர்கள் குறைதீர் கூட்டம்

ஓய்வூதியதாரர்கள் குறைதீர் கூட்டம்

Kanchipuram | மருத்துவ காப்பீடு அட்டை வழங்குவது தொடர்பாக பிரத்யேக portal தயார் செய்யும் பணி நடைபெற்று வருகிறது - ஓய்வூதிய இயக்குனர்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Kancheepuram (Kanchipuram), India

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் ஓய்வூதியதாரர்கள் குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் ஓய்வூதியதாரர்கள் குறை தீர்வு நாள் கூட்டம் கடந்த 06.10.2022 அன்று நடைபெற்ற போது பெறப்பட்டமனுக்கள் மற்றும் 30.05.2023 ஓய்வூதியதாரர்கள் குறை தீர்வு நாள் கூட்டத்திற்காக பெறப்பட்டமனுக்கள்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி விவாதிக்கப்பட்டது.

மேலும் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் பெறப்பட்ட அனைத்து மனுக்களின் மீதும் 15 நாட்களுக்குள் விரைவாக நடவடிக்கை எடுக்கவும்,இது குறித்து முன்னேற்ற அறிக்கையினை மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பிடவும் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.

ஓய்வூதிய கருத்துரு அனுப்புதல்,ஊதிய நிர்ணயம் மற்றும் அதனைச் சார்ந்த பணிகளை தொய்வின்றி செய்யும் வகையில் துறை அலுவலர்களுக்கு பயிற்சி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன அவர்களால் தெரிவிக்கப்பட்டது. ஓய்வூதியதாரர்களால் வழங்கப்படும் கோரிக்கை மனுக்களின் மீது காலதாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓய்வூதிய சங்க பிரதிநிதிகளால் தெரிவிக்கப்பட்டது.

ஓய்வூதியதாரர்களுக்கான மருத்துவ காப்பீடு அட்டையில் ஓய்வூதியதாரர் மற்றும் அவருடைய மனைவியின் புகைப்படத்துடன் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக, பதிலளித்த ஓய்வூதிய இயக்குநர் அவர்கள் மருத்துவ காப்பீடு அட்டை வழங்குவது தொடர்பாக பிரத்யேக portal தயார் செய்யும் பணி நடைபெற்று வருவதாக கூறினார்.

இக்கூட்டத்தில் ஓய்வூதிய இயக்குநர்‌ து.ஸ்ரீதர்,மாவட்ட கருவூல அலுவலர் அ.அருள்குமார்,மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) (பொ)பாபு,மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்)வே.புஷ்பா,அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் கலந்துக் கொண்டனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Kanchipuram, Local News