முகப்பு /காஞ்சிபுரம் /

தமிழகத்தில் கி.பி.10ம் நூற்றாண்டிலேயே சொத்து கணக்கை தாக்கல் செய்யும் நடைமுறை இருந்ததா..! பழைய சீவரம் கல்வெட்டு தகவல்கள் சொல்வது என்ன?

தமிழகத்தில் கி.பி.10ம் நூற்றாண்டிலேயே சொத்து கணக்கை தாக்கல் செய்யும் நடைமுறை இருந்ததா..! பழைய சீவரம் கல்வெட்டு தகவல்கள் சொல்வது என்ன?

X
பழைய

பழைய சீவரம் கல்வெட்டு

Pazhayaseevaram Vaigunda Perumal Temple : கி.பி. 10ம் நூற்றாண்டிலேயே ஆட்சி பணி செய்வோர் சொத்துக் கணக்கை தாக்கல் செய்யும் நடைமுறை தமிழகத்தில் இருந்துள்ளது. ஆச்சரியமளிக்கும் தமிழரின் நிர்வாகத்திறனை நமக்கு விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Kanchipuram, India

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1100 ஆண்டுகளுக்கு முன்பே சொத்து கணக்கைதாக்கல் செய்த ஊராட்சி வேட்பாளர்கள் பற்றிய அறிய வரலாற்று பழைய சீவரம் வைகுண்டநாத பெருமாள் கோவிலில் உள்ள கல்வெட்டுக்கள் நமக்கு தெரிவிக்கின்றன. சமீபத்தில் பாரத பிரதமர் மோடி மன்கிபாத் என்ற மனதின் குரல் நிகழ்ச்சியில் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் தமிழகத்தில் குடவோலை முறை தேர்தல் பற்றி குறிப்பிடுகிற உத்தரமேரூர் வைகுண்டநாத பெருமாள் கோவில் கல்வெட்டு தற்கால தேர்தல் முறையை ஒத்திருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.

இதேபோல் பழைய சீவரத்தில் உள்ள வைகுண்ட பெருமாள் கோவிலில் ஊராட்சி நிர்வாகத்தை பற்றிய அறிய தகவல்கள் காணக் கிடைக்கின்றன. ஊராட்சி நிர்வாகத்தை மேற்கொள்வதற்கு பெருங்குறி சபை என்ற ஒரு சபை அதாவது ஊரை ஆளும் சபை என்று பொருள் தரும். இந்த சபை தான் ஊரை நிர்வகித்து வந்ததாகவும், அது ஊர் வாரியம் என்ற பெயரில் அழைக்கப்பட்டதாகவும் ஊர் வாரியத்தை நிர்வகிக்க தேர்வு செய்யப்படும் நிர்வாகிகள் தற்காலத்தில் பெருந்தலைவர் அதாவது சேர்மன் எனக் குறிப்பிடுவது போல 1100 ஆண்டுகளுக்கு முன்பே மரியாதை நிமித்தமான வாக்கியமான பெருமக்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இந்த ஊர் வாரிய நிர்வாக பதவிக்கு போட்டியிடுபவர் போட்டியிடுவதற்கு முன்பே சொத்து கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். பதவி முடியும்போதும் சொத்துக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். கணக்கை எழுத தொடங்கும்போதும், முடிக்கும்போதும் சத்தியம் செய்ய வேண்டும். உலக சட்டங்களுக்கெல்லாம் முன்னோடியாக அன்றே நம் தமிழர்கள் செயல்பட்டு வந்ததற்கு சாசனமாக பழைய சீவரம் கல்வெட்டுகள் தெளிவாக குறிப்பிடுகின்றன.

இவர்களுக்கான பதவிக்காலம் 2 ஆண்டுகள். மறுமுறை போட்டியிட முடியாது. இப்பணியை செய்வோர் வாரியம் செய்வோர் எனவும், இவர்கள் பிற ஊர்களுக்கும் சென்று வாரியம் செய்த செய்தியும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஆண்டுதோறும் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். வாரிய பணிகளை செய்யாமல் இருக்கக் கூடாது என்றும் விதிகள் இருந்ததாக கல்வெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களுக்கு ஊதியமாக 2 கழஞ்சு பொன் அதாவது 10 கிராம் வழங்கப்பட்டதாகவும், இக்கோவிலில் உள்ள பகுதி விண்ணபுரம் என அழைக்கப்பட்டதாகவும், இது ஊற்றுக்காட்டு கோட்டத்தில் கி.பி.10ம் நூற்றாண்டில் ஆட்சி செய்த பார்திவேந்திராபதி மற்றும் முதலாம் பராந்தக சோழனின் கல்வெட்டுகள் மூலம் தெரியவருகின்றன. இச்செய்திகளை 2005ம் ஆண்டே தொல்லியல் ஆய்வாளர் எஸ்.ராஜவேலு கண்டறிந்த குறிப்புகள் ஆலயத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

ஆனாலும் இச்செய்தி பலருக்கு தெரியாமல் உள்ளது. இந்த ஆய்வாளரின் கண்டுபிடிப்பு தமிழனின் நிர்வாக ஆட்சி முறை நுணுக்கங்களை பலநூறு ஆண்டுகளுக்கு முன்பே உலக மனித குல வளர்ச்சிக்கும், நாகரீகத்திற்கும் முன்பே விதிகளாக பயன்படுத்தி நிர்வகித்த தமிழனின் பெருமையை அனைவருக்கும் சென்றடைய செய்ய வேண்டும் என்று வாலாஜாபாத் வட்டார வரலாற்று ஆய்வு மையத் தலைவர் அஜய்குமார் கேட்டுக்கொண்டார்.

First published:

Tags: Kanchipuram, Local News